Wednesday 26 May 2021

அளவு கடந்த - ஜனநாயகம் - Too much of Democracy 

அளவிற்கு மிஞ்சினால் அம்ருதமும் விஷம்.

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் 
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் 
பள்ளி தலம் அனைத்தும் கோவில் செய்குவோம் 
பள்ளி தலம் அனைத்தும் கோவில் செய்குவோம் 
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம். 

என்றான் பாரதி . 
பாரதி 1921 செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இரவு இறைவனடி சேர்ந்தார். நாம் சுதந்திரம் பெற்றதோ 1947 ஆகஸ்ட் மாதத்தில்.. . நாம் சுதந்திரம் பெறுவதற்கு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன் நமக்கு சுதந்திரம் கிட்டி விடும். அப்போது என்ன செய்ய வேண்டும் என்று பாடுகிறான் பாரதி. இவனல்லவோ தீர்க்கதரிசி . 

பாரதத்தின் கடைகோடி எட்டயபுரம் அங்கே பிறந்த ஒருவன் சுதந்திரம் பெறுவோம் தனி தமிழ்நாடு அடைவோம் … வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்றெல்லாம் எழுதவில்லை . மாறாக…. . 

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம். என்கிறான்.. இமயமலையில் நாம் அன்னியர் ஊடுருவ வாய்ப்பில்லாமல் ரோந்து பணியில் இருப்போம் என்கிறான். பல காரணங்களால் அந்நியனுக்கு மிக வாய்ப்பாக இருக்கும் மேலை கடல் .பகுதியில் ரோந்து கப்பல் விடுவோம் .. வர்த்தகமும் மேற்கொள்வோம் என்கிறான் .. எவை கோவில் ஆக வேண்டும், ஆலைகள் வேண்டும் , காகிதம் என்று நம் தேச காகித பணம் செய்வோம் என்கிறான் .. நமக்கென்று வர்த்தகம் இருக்கும் , கல்வி சாலைகள் நம் வரலாற்றோடு இருக்கும் என்றெல்லாம் முன்னமே கணிக்கிறான். பாரதி கண்ட கனவு பலித்ததை பார்த்ததினால் தானோ என்னவோ அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்ற 21ஆம் நூற்றாண்டின் வலிமை மிக்க சொற்றொடரை நமக்கு விட்டு சென்றார். 

பாரதியின் கனவு நினைவானது. சுதந்திரம் கிடைத்தது. என்ன செய்தோம் நாம் .. என்பதை விட என்ன செய்து இருக்க வேண்டும் நாம் என்று எண்ணுகிறேன்.. . 

இந்தியா என்ற பெயர் மாற்றப்பட்டு இருக்க வேண்டும் .. பாரதம் தேசம் என்றே அடையாள படுத்தி இருக்க வேண்டும். . இருந்த வரலாறுகள் குப்பையில் தூக்கி விட்டு எறியப்பட்டு இருக்க வேண்டும். படையெடுப்பாளர்கள் சூட்டிய பெயர்கள் அழிக்கப்பட்டு இருக்க வேண்டும். 

தேசியமும் தெய்வீகமும் நம் இரு கண்கள் என்று சொன்ன முத்துராமலிங்க தேவர் பெருமகனார் கருத்து அன்று இருந்த அனைத்து தேசத் தலைவர்கள் எண்ணத்திலும் உதித்து இருக்க வேண்டும் தேசம் தேசப்பற்று , இறையாண்மை இது சார்ந்தே சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்க வேண்டும். இறையாண்மைக்கு எதிரானோருக்கு மரண தண்டனை என்று சட்டம் கடுமையாக உள்ளதாக, இயற்றப்பட்டு இருக்க வேண்டும். 

பிரிவினை வாதம் எதுவும் தலைதூக்கினால் ராணுவ நடவடிக்கை பாயும் என்றிருக்க வேண்டும். இது இறை தேசம் இங்கு நாத்திகத்திற்கு இடமில்லை. மதமாற்றம் கொலை குற்றமாகும். என்றெல்லாம் இருந்து இருக்க வேண்டும். 

பாடப்படிப்புகளில் ஆங்கிலத்தை விட தாய் மொழிக்கு முக்கியத்துவமும் , பாடத்திட்டங்களில் ஒழுக்கம் தேசப்பற்று ஆகியவை முக்கிய அங்கங்களாகவும். அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னோடி நாம் தான், அது சார்ந்து நாம் பயணித்தல்.. இப்படி கல்வி உருவாக்கப் பட்டு இருக்க வேண்டும். 

அரசின் சலுகைகளை அனுபவிக்க குடும்பத்தில் ஒருவராவது ராணுவம் சார்ந்த ஏதாவது ஒரு பணியில் இருந்து இருக்க வேண்டும். கல்வி, மருத்துவம், சட்டம் அரசின் கையில் மட்டுமே இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் 4வது தூண் ஊடகம் அன்னியர் கட்டுபாட்டிற்கு செல்லாத சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்க வேண்டும். 

அளவுக் கடந்த ஜனநாயக பார்வை கொண்டு நம் தேசத்தின் தொடக்கம் இருந்ததால் இது போன்ற அம்சங்கள் இல்லாததால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிறான். ஜாதி வெறியர்கள் கட்சி ஆரம்பித்து அரசியல்வாதி ஆகிறார்கள்.. சில நேரம் அவர்களின் உளறல்கள் அம்பலம் ஏற ஆரம்பிக்கின்றன. நாட்டில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கலவரங்கள் அந்நியர்கள் தூண்டுதலால் நடைபெறுகின்றது. 

நம் நாட்டின் லா மேக்கர், சட்ட உருவாக்க சபை உறுப்பினர் மிக தைரியத்துடன் நம் எதிரி நாட்டில் போய் நம் நாட்டை பற்றி இழிவாக பேசுகிறார்கள். நாட்டின் முக்கிய தலைவர்கள் தேசத்தை விட்டு வெளியே போய் நாட்டில் உள்ள யாருக்கும் தெரியாத உடன்படிக்கைகள் அயல் நாட்டினருடன் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். கொள்ளையர்கள், கிராதகர்கள், கொலைகாரர்கள் ஆட்சியில் கோலோச்சுகிறார்கள் . காசுக்கு செய்தியை விற்கும் ஊடகங்களை காண முடிகிறது . 

இதன் தாக்கம் எவ்வளவு மோசம் என்றால்.. இந்தப் பெருந்தொற்று காலத்தில் ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் ஒரு மருந்தினை மக்களுக்கு அற்பணிக்கிறது. ஆனால் அரசியல்வாதி என்ற பெயரில் ஒரு மூத்த அரசியல்வாதி அரசியல் காழ்ப்புணர்ச்சியால் .. ராணுவத்திற்கு இதுவா வேலை .. என்று கிண்டல் அடிக்கிறார். சட்டங்கள் சரியாக இருந்தால் அவருக்கு இந்த துணிவு வந்து இருக்குமா ? 

வாழ்க்கையில் ஒழுக்கத்தால் கேட்டு போனவர்கள் , பல தீயப் பழக்கத்தின் உரிமையாளர்கள் எல்லாம் ஜனநாயகத்தின் உயர் பதவிக்கு போட்டி போடுகிறார்கள் . தவறு செய்த பலர் பிணை என்ற ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அரசாங்க பாதுகாப்போடு நாட்டின் முக்கிய பதவியில் இருக்க முடிகிறது. நாட்டின் பிரதமரையே கொல்ல கூட பிரஜைகள் துணிய முடிகிறது.. இந்த கொலைகார கும்பல்களுக்குக் கூட அனுதாபிகள் இருப்பதை பார்க்க முடிகிறது. தேர்தல்களில் மத அரங்குகள், மத நிர்வாகங்கள் பகிரங்கமாகவே கோலோச்சுகிறது.. ஆனால் நம் ஜனநாயக சட்டங்கள் இதை தடுக்க வல்லமை அற்றவையாக இருப்பது கேலிக் கூத்தாகும். 

கோயில்களை அழிப்பேன். என்பவர்கள் கோயில் நகரங்களின் நாடாளுமன்ற , சட்டசபை பிரதிநிதி ஆக முடிகிறது. இந்த பெண்ணை நான்தான் கற்பழிப்பேன் என்பவர்தான் இந்த பெண்ணை தாரை வார்த்து கொடுப்பவர் என்றால் … இங்கு நீதி எப்படி வாசம் செய்யும். . 

என்ன செய்ய போகிறது ஜன நாயகம். ஜனங்களை கடித்து குதறும் நாய்களின் அகம் ஆக உள்ளது ஜனநாயகம் . இதற்கு சாட்சி சமீபத்திய தேர்தல் முடிவுகளும் கலவரங்களும். கண்ணெதிரே அட்டூழியம் ஆனாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. கிழிந்தது பெண்களின் ஆடைகள், அழிந்தது மக்களின் உரிமை .. கொத்து கொத்தாய் கொலைகள் லட்ச லட்சமாய் உள்நாட்டில் அகதிகள். பாதிக்கப்பட்டோரில் அதிகம் பட்டியல் இன மக்கள். . 

வெட்கக்கேடு … உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நாம் தானாம் … என்ன செய்யப் போகிறோம் 

 தோற்று விட்டோமோ ஜனநாயகத்தில் சர்வேசா !!

Sunday 16 May 2021

 நன்றி மோடி ஜி 


தேசம் , தெய்வம் இரண்டும் நம் கண்கள் என்றார் முத்துராமலிங்க தேவர் பெருமகனார். அதை கடைபிடிக்கும் ஒரு உன்னதத் தலைவராக வாழும் மோடி அவர்கள் வாழும் காலத்தில் வாழ்வது பெருமை ஆக இருக்கிறது . 
.
ஒரு நாளில் விழித்து இருப்பது எவ்வளவு நிமிடங்களோ அது அத்தனையும் நாட்டு, மற்றும் உலக நலன்களுக்காக ஒருவர் வாழ வேண்டும் என்பது ஒரு ஸ்வயம்சேவகனின் சிந்தனையாக இருக்க வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். அதை கடைபிடிப்பது கிருஹஸ்தர் (இல்லற வாழ்வில் இருப்போர்) ஆக இருக்கும் கார்யகர்த்தர்களுக்கு சிரமம் ஆனால் ஒரு முழுநேர ஊழியனுக்கு அதற்கான வாய்ப்பு அதிகம்  உள்ளது. அதை முழுவதுமாக கடைபிடிப்பவரே நம் பாரத பிரதமர் மோடி அவர்கள்.
.
நாட்டை சீர்திருத்தி .. எதற்கும் நாம் அடுத்தவர் கையை ஏந்த கூடாத நிலைமையில் வைத்து விட்டால் வரும் ஐம்பது வருடங்களுக்கு நம்மை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்கிற எண்ண ஓட்டம் கொண்டவர். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் 

1. நாட்டில் எங்கும் மதக்கலவரம் , குண்டு வெடிப்பு இருக்க கூடாது 

2.இந்திய மீனவர் நிம்மதியாக இருக்க வேண்டும் 

3. காஷ்மீர் நம் தேசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகி அங்கு இருப்பவர்களுக்கு தேச பற்று வரும் போது நாட்டில் ராணுவத்தின் அவசியமே இருக்காது  

4.சுத்தம் சோறு போடும், உயிர் காக்கும் ..அதற்காக  ஸ்வட்ச் பாரத்  திட்டம்

5. அனைவருக்கும் வங்கி கணக்கு .. ஜன தன் திட்டம்

6. சுயக் காலில் நிற்க ஆத்மநிர்பார்  திட்டம்.

இது அத்தனையும் செய்து முடித்தார் .

இவைகளின் நடுவே சீனாவும் உலகின் மருந்து கம்பெனிகளும் ஏற்படுத்திய மறைமுக போர் கொரோனா .
.
அதையும் வெற்றி கரமாக சாமாளித்து. சுயமாக n95 மாஸ்க் முதல் தடுப்பு ஊசி வரை தயாராகி இப்போது 2DG என்ற மருந்தும் ராணுவ ஆராய்ச்சி மையத்தால் வர இருக்கிறது. 
.
அரசியல் காரணங்களுக்காக முட்டாள்கள் இது அனைத்தையும் மறைத்து அவர் போடும் உள்ளாடை யில் இருந்து துண்டு வரை விலை வைத்து ... அவர் தாடியை கிண்டலடித்து அவர் மொழியை கிண்டல் அடித்து .. யாரோ இரு முதலாளிகள் பெயரை வைத்து இவரின் பிம்பத்தை உடைத்து... தேசம் இழிநிலைக்கு செல்ல எல்லா வேலைகளும் செய்கின்றனர். என்னை தீயில் இட்டு பொசுக்கினாலும் கடைசி நிமிடம் வரை நான் தேசம் முன்னேற பாடு படுவேன் என உழைக்கும்  ஏழைத்தாயின் மகன் தேசத்தின் தெய்வ மகன் மோடி அவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த வலைப்பூ வில் நிறைய நன்றி செய்தி போட இருக்கிறேன் உங்கள் ஆதரவை நாடும் ..ஞா.சூரிய நாராயணன்.  

 








Friday 14 May 2021

 

தேவை சுய ஒழுக்கம்

எத்தனை சோதனை வரினும் வீழோம்! வென்றே காட்டுவோம் !!     ...
.ஆம் இது பாரத தேசத்திற்கான அடிப்படைப் பண்பு.

இது ஏதோ கொள்ளையர்கள் போகிற போக்கில் தங்கி போக உருவான நாடு அல்ல. ஒரு நாட்டில் உள்ள குற்றவாளிகளை நாடு கடத்தியதால் ஒருவான ஜனத்தொகையால் அடையாளப்படுத்தப்பட்ட நாடு அல்ல.. இதன் சரித்திரம் கூறுகிறது.. பல ஆயிரம் ஆண்டுகள் பெருமை கொண்டது இந்த நாடு என்று. சில இதிகாசத்தின் கால அளவு சரித்திரம் கூறும் கால அளவையும் தாண்டிய வரலாற்றினை பறைசாற்றுகிறது.     
பாரத நாடு பழம்பெரும் நாடு என்கிறான் தேசியக் கவி. பாரதியர்கள் பூஜ்யத்தை உலகிற்கு அளித்ததால் தான் என்னை போன்றோர் சாதிக்க முடிந்தது என்கிறார் நோபல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீன். என் கணிதம், வான சாஸ்திரம், சிற்பசாஸ்திரம், கட்டிடக்கலை, கணிதம் ,ரசாயனம், அறுவை சிகிச்சை இப்படி எல்லாத் துறைக்கும் உலகின் முன்னவர்கள் பாரதியர்களே என்கிறது உலக அரங்கம்.  பெருந்தன்மையில் இந்தியனை விஞ்சிய மனிதன் கிடையாது. யாதும் ஊரே யாவரும் கேளிர் , வாசுதேவ குடும்பகம் எனவும் லோகா சமஸ்தா சுகினோ பவந்து (உலகம் வாழ் அனைத்து உயிரினமும் சுகமாக இருக்க வேண்டும் ) எனவும் சொன்ன பெருமக்களை கொண்ட நாடு இந்த நாடு.

..இடுக்கண் வருங்கால் நாம் யார்? நம் வலிமை என்ன? என்றும் அறிய வேண்டும் என்கிறது நமது பழங்கால வரலாறுகள். அதற்காகவே மேற்ச்சொன்ன நம் வலிமை பற்றிய பீடிகை. இவ்வளவு பெருமை வாய்ந்த நாம் சுய ஒழுக்கத்திற்கும் உலகின் முன்னோடியாக இருந்து இருக்கின்றோம் என்று இந்த பெருந்தொற்று காலத்தில் அறிவுறுத்த வேண்டிய கட்டாயத்தில் சிலவற்றைக் கூற விழைகிறேன்.

கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது பழமொழி. இதையே கடைபிடித்து வந்தோம், வருகிறோம்.   வீட்டின் முன் புறம் சாணம் தெளித்து கோலமிட்டோம். உணவு உண்டு முடித்தவுடன் சாணம் தெளித்து எச்சிலிட்டோம். கடைத் திறக்கும் போது , விழா தொடக்கம், இப்படி அந்நிய மனிதர் கூடும் சமயங்களில் மஞ்சள் கலந்த நீர் தெளித்தோம். அம்மை நோயில் இருந்து பல பெரும் நோய்களுக்கு சுயமாய் மருத்துவரானோம் நோயை விரட்டினோம். ஆனால் இந்த நுண் கிருமிக்கு மட்டும் நாம் அரசை எதிர்பார்ப்பது ஏன்?  
.
இந்த கொரோனா கிருமிக்கு இதுவரை நிரூபிக்கப்பட்ட மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை. இது கண்ணுக்கு தெரியாது. மிக சுலபமாக பரவும். நோய் வந்தவரின் உடலில் இது அதிகாரம் செலுத்துகிறது. பயம், அக்கறை இன்மை, அலட்சியம், ஏற்கனவே இருக்கும் வியாதியின் தீவிரம்..இவைகளால் தொற்று உயிர் பலியில் முடிகிறது.  முதல் அலையில் பிணம் விழும் காட்சி இங்கொன்றுமாய் அங்கொன்றுமாய் இருந்தது .. இரண்டாம் அலையில் அதுக் கூடி பிணக்குவியல்கள் இப்போது கண் முன்னே. என்னக் கொடுமை! இன்னும் என்ன நடக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.  காசை வாங்கி கொண்டு ஓட்டை போட்டு விட்டு, அரசியல் வாதிகள் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்று அலட்சியமாக இருப்பது இந்த தேசத்தின் வரலாற்று மாண்பிற்கு இழுக்காகும்.

அரசின் பங்கிற்கு பல விதமான தடுப்பூசிகள், நோய்க் கிருமித் தொற்றுத் தடுப்பு முறைகள், ஊரடங்குகள் என தன்னால் என்ன முடியுமோ அவற்றை செய்து கொண்டுதான் உள்ளது. பாரத நாட்டின் தீர்க தரிசிகளில் ஒருவராய் நம் பிரதமர்.. சுத்தம் மட்டுமே நல் வாழ்வுதரும் என்பதை கொரோனா வருமுன்  ஐந்து வருடம் முன்பே  நாட்டிற்கு பறைசாற்றி விட்டார். போதாக்குறைக்கு தூய்மை இந்தியா திட்டம் மூலமாக பல நல்ல விஷயங்களையும் நமக்கு அளித்துள்ளார். சுத்தம் சோறு போடும் என்பது நாம் அறிந்த சொலவடை... கூடவே சுய ஒழுக்கம் உயிர் காக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
.
கொரோனா விற்கு மருந்து இல்லை என்கிறார்கள் .. நான் சொல்வேன் உண்டென்று.

ஒருவரின் அப்பாவிற்கு கொரோனா,.. இது ஒன்று போதும் அந்த தெருவெங்கும் கொரோனா பரவ. என்ன செய்தான் மகன். முதலில் கட்டு கட்டாய் வாங்கினான் முகக்கவசம் எனும் முகமூடியை. அடுத்து அவன் வாங்கியது சில இயற்கை பொருட்களை . அவற்றில், மஞ்சள், கடுக்காய், வெற்றிலை, பழங்கள், கிராம்பு, இஞ்சி , துளசி இருந்தன..  தந்தையிடம் இருந்து அவன் குடும்பத்தில் இருந்த அனைவரும் தூர இருந்தனர் ஆனாலும் தந்தை சௌகரியமாக கவனித்து கொள்ளப் பட்டார் . 3 வேலை ஆவி பிடித்தார். சத்தான உணவு சாப்பிட்டார் .. மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளும் உண்டார். தெருவில் இருந்த யாருடனும் இவர்கள் முகக்கவசம் இன்றி பேச வில்லை. அனாவசியமாக வீட்டில் உள்ளவர்கள் வெளியே போக வில்லை. எங்கு சென்றாலும் கை கழுவுதல் , சமூக இடைவெளிக் காத்தல் என்று எல்லாவற்றையும் கடைபிடித்தனர். இந்த அனுபவத்தை தெருவில் இருந்த அனைவருக்கும் சொல்லி புரிய வைத்தனர். என்ன ஆச்சரியம் அந்த ஒட்டு மொத்தத் தெருவிலும் ஒருவருக்கு மட்டுமே கொரோனா.. அவரும் உயிர் பிழைத்தார். அந்த தெருவில் கட்டை கட்ட வில்லை. போலிஸ் வர வில்லை ஆம்புலன்ஸ் வரவில்லை. ஒரு தெருவில் இது சாத்தியம் என்றால் ஒரு கிராமத்தில் இது சாத்தியம் இல்லாமலா போகும், ஒரு கிராமத்தில் இது சாத்தியம் என்றால் , ஒரு பெரும் நகரத்தில் இது சாத்தியம் இல்லாமலா போகும்.    .
இங்கு கொரோனா என்ற மிருகம் தனித்து விடப்பட்டது , அது உருவாக்க நினைத்த கொரோனா சங்கிலி அறுத்து எறியப்பட்டது. எதனால் சுய ஒழுக்கத்தால். ஆகையால் சுய ஒழுக்கமே பெருந்தொற்றிற்கு மருந்தாகும்

நாம் செய்யும் தவறுதான்  என்ன   ?

1.       கொரோனாவிற்கு SMS – Sanitize, Mask, Social distance அதாவது சுத்தம், முகக்கவசம், சமூக இடைவெளி  என்ற சுமுச  என்ற மூன்று எழுத்து மந்திரத்தை கடை பிடிக்க மறப்பது.

2.       அரசு கண்டு பிடித்த தடுப்பூசி ஆபத்தானது என்ற வதந்தியை பரப்பியது.

3.       ஆங்கில மருந்துடன் நம் பாரம்பரிய மருந்துகள் மீதும் நம்பிக்கை வைக்க தவறியது.

4.       ரெம்டேவிசிர் ஏதோ மாயம் செய்யும் மருந்து என்று அனாவசிய பீதியை கிளப்பியது.

5.       அரசுடன் ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டது

6.       தவறான ஊடகங்களை ஊக்கு வித்து இன்று அவை சொல்லும் இழவு செய்திகளை மட்டும் நம்புவது.

இவையெல்லாம் விடுத்து. ஒரு மாதம் சுயக் கட்டுப்பாட்டோடு இருப்போம் அரசிற்கு ஒத்துழைப்போம். தடுப்பூசி போட்டுக் கொள்வோம்.. முகமூடி இல்லாமல் வெளியே தைரியமாக வரலாம் என்ற நிலை வரைக்கும் கொரோனாவை துரத்தி விடுவோம். பாரதம் உலகிற்கு வழிகாட்டியாக ... இது மீண்டும் ஒரு வாய்ப்பு.  தவற விட வேண்டாம்.

பாரில் எல்லா தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம் என்கிறது ஒரு தேச பக்தி பாடல்.

.சுய ஒழுக்கம் கடைபிடிப்போம் !  

பாடலில் சொன்ன வரிகளை உண்மையாக்குவோம்!!

https://dhinasari.com/general-articles/207091-self-discipline-is-the-best-remedy-for-covid.html