Wednesday 30 June 2021


 ஒன்றிய அரசு - புது டூல்கிட்  created on 24-6-2021


பாரத நாடு , சமஸ்தானங்களால், அரசர்களால் ஆளப்பட்டு வந்து அந்நியரால் ஆக்கிரமிக்கப்பட்டு, நம்மால் அடித்து துரத்தப்பட்ட போது பாரதம் என்கிற இந்தியா என்பதற்கான அரசியல் சாசனம் எழுதப் பட்டது . நிர்வாக வசதிக்காக மட்டும், கலாச்சார, மொழி ரீதியான பல மாகாணங்களை கொண்டு இருந்ததால் .. இவைகளை ஒன்றிணைத்து மத்தியில் ஒரு அரசின் கீழ் பாரதம் ஒரு நாடாக உலக அரங்கில் வளம் வரும் என தெரிவிக்கப்பட்டது . மத்திய அரசு நேரடியாக மக்களை சென்றடைய ஏதுவாக மாகாணங்கள் மாநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டது. அதை குறிக்க ஆங்கிலத்தில் Barath that is India is Union of States என்று அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. ஏற்கனவே பல மாகாணங்கள் சுயமாய் ஆட்சி ஆண்டு அந்த மாகாணங்கள் ஒன்றிணைந்து நாம் கூட்டாக ஒரு நாட்டை அமைப்போம் என்று ஒரு நாட்டை உருவாக்கி இருந்தால் United states of America போல United states of India  என்ற பதத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு எனலாம் . சில காலம் வரை ஆந்திராவாக இருந்த மாநிலத்தை நிர்வாக ரீதியாக ஆந்திரா, தெலுங்கானா என்று மத்திய அரசு பிரித்தது .ஆகையால் மாநிலங்கள் ஏதோ தனி அதிகாரம் பெற்றவர்கள் போனால் போகிறது என்று அவர்கள் மத்திய அரசோடு ஒன்றிணைந்து இருக்கிறார்கள் என்றோ கிடையாது.  District Colletor.. என்றால் மொழிபெயர்த்து மாவட்ட வசூலிப்பாளர் என்று அழைப்பது எவ்வாறு தவறோ அப்படியானது இந்த ஒன்றிய அரசு என்று அழைப்பது. இது ஏதோ பிரிவினை வாதத்தின் புது டூல் கிட் போல் தெரிகிறது. இது தேசத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் என்பதே தோன்றுகிறது 

published in ithu ungal idam in Dinamalar dt.29-4-2021

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home