Tuesday 26 January 2021

 

கிரிக்கெட் விளையாட்டும் 

வாழ்க்கை பாடமும்

19-01-2021 இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இமாலய சாதனை.

31 வருடமாக பிரிஸ்பேன் காபா மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட இழக்காத ஆஸ்திரேலியாவை இந்தியா துவம்சம் செய்து வரலாற்று வெற்றியை பதித்து கோப்பையையும் வெற்றி பெற்றது.

இவை அனைத்தையும் விட மிகப்பெரிய சாதனை என்ன வென்றால் கேப்டன், பேட்ஸ்மேன், பவுலர், விக்கட் கீபர்  என்று முழு பட்டாளமும்  அனுபவம் மிகவும் குறைந்த வீரர்கள்.

கோலி , ஷிகர் தவான், விகாரி, அஷ்வின், ஜடேஜா, ஷம்மி, பும்ரா, உமேஷ் என மிகப்பெரும் பட்டாளம் களத்தில் இறங்க முடியா நிலையில் பெஞ்ச் அணி என சொல்லக் கூடிய அணியை மேலாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் ரஹானே நடத்தி சென்ற விதம் மிக அருமை.

முதல் போட்டியில் ஒட்டுமொத்த அணியும் கடைசி ஆட்டக்காரர் எடுக்கும் ஓட்டங்கள் கூட எடுக்க முடியாத அளவு 36 ஓட்டங்களுக்கு பரிதாபமாக ஆட்டமிழந்து. அணியும் வலுவிழந்து , 2-ம் போட்டி ஆரம்பிக்கும் நேரம் ஒட்டுமொத்த ஜாம்பவான்கள், கிரிக்கெட் வரலாற்றில் சொல்லப்படும் வொயிட் வாஷ் என்ற  பதத்தை குறிப்பிட்டு... இனி அனைத்து போட்டிகளையும் ஆஸ்திரேலியா எளிதில் வென்று விடும் என்றனர்.    

இந்த ஆரூடத்தை எல்லாம் பொய்யாக்கி வெற்றி, சமன், வெற்றி  என மீதி மூன்று போட்டிகளையும் வழி நடத்தி..இறுதியில் தொடர் வெற்றி பெற்றது...வரலாற்றில் இடம் பெற்றது.
.
அட அருமை  ஆனால் இளைஞர்களுக்கு இதில் ஒரு நல்ல பாடம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டவே நான் கீழ் வரும் வரிகளை எடுத்துக் கொள்ள விழைகிறேன் ..

அது என்ன!

பலவீனமே மரணம், துணிவே வாழ்வு  என்று முழங்கிய 19ம் நூற்றாண்டின் மகான் சுவாமி விவேகானந்தர் இந்த தருணத்தில் நினைவு கூற வேண்டியவர்.

தோல்வி என்பது வாழ்க்கையில் சகஜம். தோல்வி இருதயத்திற்கும், வெற்றி தலைக்கும் செல்லாமல் பார்த்து கொள் என்று அறிவுரை கூறுவது வழக்கம். இரண்டுமே சொல்வதற்கு சுலபம் நடைமுறைக்கு கடினம். அதிலும் தோல்வி மனதை பாதிக்கா வண்ணம் அணுகுவதில் மிக பெரிய மனிதர்களே தோற்று இருக்கிறார்கள். சினிமா புகழ் ஜீவி யில் ஆரம்பித்து ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் வரை.

 

எப்படி இருக்கிறது இன்றைய இளைய சமுதாயம்.  தோல்வியே சந்திக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள் . படுதோல்வி அடைந்தாலே நமகென்று எதோ  ஒரு வாசல் திறந்து இருக்கும் என்ற பக்குவம் இருக்க வேண்டிய இளைஞர்கள் பட்டாளம் , சிறு சரிவை கூட பொறுத்துக் கொள்வதில்லை.  இதை கிண்டலாக நான் சொல்வதுண்டு.”  அப்பளம் நொறுங்கியதற்கெல்லாம் வருத்தப்படும் நிலையில் மனித மனம் பலவீனமாக உள்ளது என்று ..”  எனது சகோதரரின் கல்லூரி நண்பர் ஒருவர் வாழ்வின் மிக உயர்விற்கு சென்று தன்னுடைய மணிவிழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் என்றால் என் சகோதரருக்கு அப்போது 54 முடிந்து 55. அவரை விட இவர்   6 வயது மூத்தவர்.   
.
இந்த இடைவெளி எப்படி என்று விசாரித்த போது ஆச்சரிய பட்டு போனேன். ஆம் அவர் சந்தித்த தோல்விகள் அவ்வளவு. ஐந்தாம் வகுப்பில் கல்வி இடை நிற்றல் தமிழில் சொன்னால் டிராப் அவுட்.. 11ம் வகுப்பில் தோல்வி, puc யில் தோல்வி ...குடும்ப சூழ் நிலை காரணமாக பட்டபடிப்பில் சேர ஒரு வருடம் தாமதம்  இதையெல்லாம் தாண்டி சாதித்து வாழ்க்கையில் முக்கிய நிலையை அடைந்தார். 

 

இவ்வளவு ஏன் நம் வீரத் துறவி சிகாகோ செல்ல முடிவெடுத்ததில் இருந்து. அங்கு மேடை ஏறும் வரை அவர் பெற்ற தோல்விகளும் துன்பங்களும் தான் எத்தனை எத்தனை.
.
இதெல்லாம் இளைஞர்களுக்கு புரிய வாய்ப்பில்லை ஆனால் இந்த கிரிக்கெட் நிகழ்வு இவர்களுக்கு பலவற்றை புரிய வைக்கும் . ஆம்  வாழ்க்கையில் பணக்காரர்களால் தான் இந்திய அணியில் சேர முடியும் என்ற நிலையில் நடராஜனும், சிராஜ் ம் கீழ் மட்ட வருமான குடும்ப சூழலில் இருந்து வர முடிந்தது என்பதற்கு அவர்களிடம் இருந்த திறமையையும் தாண்டிய மன உறுதியும் முக்கியக் காரணம் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாய்ப்பும் இறை அருளால் அமைக்கப் படுவதே. 100% விளையாட வாய்ப்பு இருப்பதாக இவர்கள் கூட இந்த தொடரின் தொடக்கத்தில் நினைத்து இருக்க மாட்டார்கள். பகவத் கீதையின் மைய கருத்தான நிஷ்காம்ய கர்மா .. பிரதிபலன் எதிர்பாராது நம் கடமை என்னவோ அதை நாம் செய்ய வேண்டும் என்பதாகும். சுந்தர், அஷ்வின், தாகூர், சிராஜ், நடராஜன், ஷுப்மான் கில்  ஆகியோர் கிட்ட தட்ட இதையே பின் பற்றினர். நடந்தது என்ன ஊர் அறியும்.
.
ஒட்டுமொத்த அணியின் நிலை அதன் மேலாளர் அடங்கிய குழு இவர்களை பற்றி சிந்திப்போமே. அடிலைட் டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிந்தது. இதில் சோகம் என்ன வென்றால்.முதல் இன்னிங்க்ஸ் ல் லீட் பெற்ற நம் அணி தோற்கிறது ... அதுவும் படு தோல்வி. அணி ஒட்டுமொத்தமும் 36 ஓட்டங்களுக்குள் சுருண்டு, உலக அரங்கில் நம் மானம் கப்பல் ஏறிய நாள் அது. அடுத்த போட்டியை எப்படி எதிர்கொள்வது என்ற நிலை.    அதுவும் அடுத்த டெஸ்ட் போட்டி உலக பிரசித்தி பெற்ற கிருஸ்துமஸ் மறுநாள் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் எனப்படுவதாகும். விராட் கோலி க்கு ஒய்வு....ஷமி இல்லை. வலிமையான ஆஸ்திரேலிய அணி. ஆனால் இந்த நேரத்தில் உறுதியுடன் அணி மேலாண்மை இருந்ததும் அதையே அணி உறுப்பினர்களுக்கு ஊட்டியதும் தான் இளைஞர்கள் அறிய வேண்டும்.  
.
ஆக ஒரு விளையாட்டு , நமக்கு பிடித்த வீரர், நம் மாநில வீரர், நம் ஜாதி வீரர்.  இப்படியெல்லாம் நம் சிந்தனை ஓட்டங்களை சிதற விடாமல். இதில் இருந்து இளைஞர்கள் கற்க வேண்டிய பாடம் ...

1.       பிம்பங்களை வைத்து அஞ்சுவது பேதைமை   

2.       உயிரே போகும் நிலை வரினும் அஞ்சாமை

3.       மனதில் உறுதி வேண்டும்

4.       கடனை செய் பலனை எதிர்பாராதே

5.       கடின உழைப்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லை.

6.       திட்டமிட்ட வாழ்வே சிறந்தது .

7.       வெற்றி தோல்விகள் வாழ்க்கைப் பயணத்தின் படிகற்கள் இலக்கு அல்ல.

 

  ஜெய் ஹிந்த்

 

 சூரிய நாராயணன்,

suryg12@gmail.com

 

 

Wednesday 6 January 2021

 

கிறிஸ்தவமும் அதன் கோரத் தாண்டவமும்.

பாரத தேசம் உலகிற்கே வழிகாட்டியாக இருந்த நாடு, வருங்காலத்திலும் அப்படிதான் என்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்கூடாக  தெரிகிறது. இந்த காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பது பெருமைக்குரியது.
.

மேற்சொன்ன வாக்கியம் உண்மையாவதற்கு முதலும் முக்கியமுமான  காரணம் மதம் இல்லாத பாரதம். ஆம் பாரதம் சனாதன தர்மம் என்ற நெறிமுறையை பின்பற்றி தான் தன் மக்களை வழி நடத்தி வந்தது.  சனாதன தர்மம் (தற்போது ஹிந்து தர்மம் என்று அழைக்கப்படுகிறது ) வாழ்க்கை முறை என்பதால் அது அரவணைப்பையும், போதனைகளையும், வாழ்க்கை சிக்கலை தீர்க்கும் முறைகளையுமே பறை சாற்றியதால் அது மதமாக மதம் பிடித்து அலையாமல் மக்களை மனிதர்களாக மாற்றும் வித்தையை மட்டும் கையாண்டது. அதனாலதான் கல்வி என்று  என்று வரும்போது கூட அது (man making) மனிதர்களை உருவாக்குவதாக  இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

ஹிந்து தர்மம் நாடு பிடிக்கும் எண்ணம் இல்லாதது, ஆள் பிடிக்கும் கட்டுமானத்தை உள்ளடக்காதது. இதை உண்மை என்று நாம் சொல்வதை விட இந்த தேசத்திற்கு அடைக்கலம் வந்த யூதர்களும், பார்சிகளும் சொல்கிறார்கள் என்பதுதான் இதற்கான அத்தாட்சியாக அமைகிறது. கொட்டிகிடக்கும் சமய நூல்களும், உபநிடதங்களும் ஏதோ ஒரு விதத்தில் இதை பறைசாற்றி கொண்டே இருந்தன.  திருவள்ளுவர் என்ற சனாதன ரிஷி தனது குறள் மூலம் பண்பை வளர்க்கிறார், பாவ புண்ணியங்களை விளக்குகிறார், சிறியோர் யார் பெரியோர் யார் என்கிறார்.. கல்வியின் பயனை விளக்குகிறார். மழையின் பெருமையை உணர்த்துகிறார்... இப்படி முழுக்க முழுக்க வாழ்வியல் சம்பந்தப்பட்டே இருக்கும் அந்த பொது மறையில் மதம் வளர்க்கும் சமாச்சாரமே இல்லை

உதாரணமாக ..
.
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
(
அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:129)

குறள் 163: அதிகாரம் அழுக்காறாமை

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

பொருள் : சாலமன் பாப்பையா விளக்கம்:

பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

 

அது போல் தான் வேதங்களும் ...
அசதோமா சத்கமைய
தமசோமா ஜ்யோதிர்கமைய
ம்ருத்யோர்மா அம்ருதம்கமைய
ஒம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி!

என்கிறது

பொருள்:

பொய்யான இந்த உலகத்தனிலிருந்து மெய்யான என்னுள் என்னை அழைத்து செல்வாய்
மாயை என்ற இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எம்மை வழி நடத்துவாய்
இறப்பு என்ற பயம் நீக்கி அழிவற்ற ஆன்ம ஞானம் உணரச்செய்வாய்
இறைவா என்று

நம்மை வழி நடத்துகிறது.

தாயுமானவ சுவாமிகளோ
எல்லாரும் இன்புற்று இருப்பதை நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே ...
.
என்று சர்வே ஜனஹா சுகினோ பவந்து என்ற வேத வரிகளை மொழிபெயர்த்தது போல் கூறுகிறார்.

 

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

(
அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:190)  என்று தெற்கே உள்ள ஞானி சொல்வதை

படிக்காமலேயே அதே கருத்தை கூறுகிறார் அன்னை சாரதா தேவி

ஆம் . Before finding Fault with others Rather find your own faults   என்கிறார் அன்னை.

இப்படி சொல்லி கொண்டே போகலாம்...

இந்த ஹிந்து தர்மம் அந்நிய மதங்கள் ஊடுருவும் போது... அவர்களால் ஹிந்து மதம் என்றும் இந்த வாழ்வியல் வசந்தத்தில் இருப்போர் ஹிந்துக்கள் என்றும்... தன் மதவெறி பிடித்த சமூகத்திற்கு அடையாள படுத்துகிறது. 

 

அத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.. அதற்கு அடுத்தப்படியாக  இந்த விஷ ஜந்துக்கள் விஷத்தை கக்குகின்றன. ஆம் ஆள் பிடிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்துகின்றன. அதற்கான பதவிகளும் அறிவிக்க படுகிறது .. அவர்கள் பிடித்த ஆட்கள் ஏதாவது ஒருவழியில் வசதியாக இருக்க தன் அசுர பலத்தை உபயோகப்படுத்துகிறார்கள். பின்பு அவர்களிடம் தசமபாகம் போன்ற பங்கினை பெற்று மத அமைப்புகள் வசதி வாய்ப்போடு தன் மதப் பெருக்கலை செய்ய ஏற்பாடுகள் செய்கிறது. அரசாட்சி அவர்கள் கையில் இருந்ததாலும் பெரும் நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பாலும். ஆக்கிரமிப்பு இடங்களில் தொண்டு சார்ந்த வேலைகளை நிறுவுவதாலும் .. கிருத்துவ மதம் மிகப்பெரும் மதம் மாற்றும் வேலையில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொண்டே இருக்கிறது.

ஆங்கிலத்தில் loosely linked என்று சொல்லும் ஆழ் பற்று இல்லா சனாதன தர்மிகள், சாத்வீகிகள் , எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்று சோம்பேறியாய் இருப்போர் என்று ஹிந்து தர்மிகள் அதிகம் இருப்பதாலும், இடையில் வந்த சாதி , அதன் கோரத்தாண்டவம் .. தீண்டாமை தீ போன்றவற்றாலும் இந்த் நாடு பிடிக்கும் கயவர்கள் மிக சந்தோஷத்துடன் தங்கள் வருவாய் பெருக்கதொடு தங்கள் ஏசு விற்பனையை பெருக்கி கொண்டே போகிறார்கள். சைக்கிளில் சென்று மத போதகம் செய்த தினகரன், லாசரஸ் இன்று பணக்குவியலின் உச்சியில் நின்று கொண்டு ஹிந்து கோவில்களையும் சாத்தானின் அரண் என்று பகிரங்கமாக கூறும் நிலையிலும்.. இயற்க்கை வளங்களை  கபளீகரம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஹிந்து தர்மம் என்ற வீட்டின் வெளியே இருந்து கன்னம் வைக்கும் கயவர்களுக்கு சுவரின் அஸ்திவாரமும் உறுதியும் அதிகமாக இருப்பதால் .. தங்கள் வியாபாரம் சிறக்க வீட்டின் உள்ளேயே கன்னம் இடும் வேலையை சில நாத்திகர்களிடமும், மொழி பிரிவினை வாதிகள் இடமும் கொடுத்து உள்ளனர். இதில் பல லாபங்களை ஏற்படுத்த எஸ்ரா சற்குணம் என்ற அரசியல் தரகர்கள் மிக சிறந்த ஓட்டரசிய்ல் திணிப்பை ஏற்படுத்து கின்றனர். 
.
சமீபத்தில் இவர்கள் புது யுக்தியாக கலையரசி என்ற ஞானஸ்தானம் பெற்ற விபூதி பூசிய சைவப் பாட்டி  வேஷதாரியை இறக்கி உள்ளனர். 



சிவனை தான் வணங்குகிறாய் என்றால் நீ முழங்க வேண்டியது மகா சிவராத்திரி அன்று.. சைவ மேடைகளில்... ஆனால் கிருத்துவ மேடையில் நீ முழங்க வேண்டிய அவசியம்  என்ன?..கோவிலை இடிப்பேன் என்று சொல்லும் திருமாவளவன் உனக்கு நெருக்கம் ஆனால் ஒரு சைவ அடியாரும் உனக்கு ஞானியாக பட வில்லை. ஒரு பேட்டி கொடுக்கக் கூட உனக்கு சுந்தரவள்ளி போன்ற தரங்கெட்டு பேசும் நாத்திக பெண்மணி துணை ஏன்?. ஹிந்து என்று சொன்னால் உடம்பெல்லாம் எரிகிறது என்கிற உனக்கு நீ வணங்குவதாக சொல்லும் சிவனை (கடவுளை ) இல்லை என்று சொல்லும் சுந்தரவள்ளிகள் மணப்பதேன். ஹிந்து கடவுள்கள் சிவன் உட்பட சாத்தான்கள் என்று சொல்லும் கிருத்துவ உறவு உனக்கு உடன் பிறவா சகோதர உணர்வு என்று பிரகடனப் படுத்த கொடுக்கப் பட்ட கூலி எவ்வளவு? ஹிந்து என்றால் திருடன் என்றான் தகப்பன்..விபூதியை அழிப்பேன் என்றான் தனையன் அவனை பார்க்கும் போது உனக்கு உடல் குளிர்கிறது என்றால் நீ எதற்காக ஹிந்து விரோதியாக இருக்கிறாய் என்று கூடவா புரியாத அளவு ஹிந்து சமுதாயம் உள்ளது !

பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி ||    

என்ற உயரிய கருத்துடை சனாதன தர்மத்தை ஆனானப்பட்ட மெக்காலே படையாலேயே கூட பெரிதாக அசைக்க முடியவில்லை. இனியும் கிருத்துவம் தன் அகோர ஆட்பிடிக்கும் பயங்கரவாதத்தை நிறுத்திகொள்ளாவிடில்  சாதுக்கள் மிரண்டால் காடு மட்டுமல்ல கிருத்துவமும் தாங்காது என்று  எச்சரிக்கிறோம்.
ஜெய் ஹிந்த்/

..........................................................................................................G.சூரிய நாராயணன்.

 

 published in Dhinasari  

https://dhinasari.com/bunch-of-thoughts/186665-how-christians-convert-religion-as-to-hated-politics.html