Sunday 27 June 2021

 மொழிப் பற்றா ? மொழி அரசியலா?


மொழிப் பற்றா ? மொழி அரசியலா?


மதராஸ்  (சென்னை ) என்பது மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கத்தின் போது தமிழை தன்னகத்தே கொண்டதால் தமிழகம் என்று பெயர் பெற்று இருக்க வேண்டும். தமிழ் நாடு என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டு அதுவே நம் மாநிலத்தின் பெயராகி போனது. அன்று முதல் தமிழ் அரசியல் விலைபொருள் ஆனது .


ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி படித்த,  நாடாளுமன்ற உறுப்பினர். இவரின்  தாய் மொழி தமிழ், ஆனால்   முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் அவர்களை  கொலை செய்த  குற்றவாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் விடுதலை  பற்றி எதற்கு பேச வேண்டும் என்று கேட்டால்.. அவர் தமிழின விரோதி ஆகி விடுவார். ஆனால்   சாந்தன், பேரறிவாளன், முருகன் இவர்களுக்கு ஆதரவாக பேசிய ...அம்மணமாக நடித்து புகழ்ப் பெற்ற  நடிகர் தமிழ் உணர்வாளர் ஆகி விடுவார். இதற்கு பெயர்தான் தமிழ் பற்றா.


பாரதம் சுததந்திர நாடாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள். நமது மத்திய அரசு வரும் சுதந்திர தினம்  75 வது சுதந்திர தினம் என்பதால் அதை அம்ருத் மகோத்சவ்  , என்று கொண்டாட இருக்கிறது. மங்கள் பாண்டே வில் ஆரம்பித்து மருதுபாண்டியர் ,கோகலே , திலகர், படேல், காந்தி,நேரு, சாவர்க்கர், வ.உ.சி, வா.வே.சு, திங்கரே, ஆசாத், பகத்சிங், செம்பகராமன், நேதாஜி, திருப்பூர் குமாரன், வாஞ்சி, பகத் சிங் இப்படி நமக்கு தெரிந்தோர் பலர், தெரியாதோர் எண்ணிலடங்கா. ஆனால் இவர்களை நினைவு கூறும்போது அவர்களின் சாதி, மொழி, இனம், மதம் பார்த்து கொண்டாடுவதில்லை. 


சுதந்தரப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் இப்படி பல பரிமாணத்தை பெற்றது. ஆனால் வெள்ளையனை நேரடியாக எதிர்க்க இரண்டு சொற்றொடர்கள் ஏற்படுத்தப்பட்டன . அவை கேட்ட மாத்திரத்தில் வெள்ளையன் முகம் இருண்டு விடும். வெறி தலைக்கு ஏறும்.  மேலே சொன்ன தலைவர்கள் பலரும் இந்த வார்த்தைகளை உச்சரித்ததால் பல இன்னல்களை பெற்று இருக்கிறார்கள். 

அந்த இரு வார்த்தை சொற்றொடர்கள் 


  1. வந்தேமாதரம்    2.ஜெய்ஹிந்த்


இவை தாரக மந்திரங்கள் … இதற்கு மொழி கிடையாது. பாரதியார் வெள்ளையனை பார்த்து தாய் மண்ணே வணக்கம்  என்று கவிதை எழுத வில்லை. திருப்பூர் குமரன் வந்தே மாதரம் எனும் போதும் ஜெய்ஹிந்த் எனும் போதும் விடுதலை வேட்கை ஓங்கி ஒலித்தது.. ஆனால் அதை தாய் மண்ணே வணக்கம் என்று சொல்லாததாலோ ,, வெல்க பாரதம் என்று சொல்லாததாலோ அவன் தமிழின துரோகி ஆகி விட முடியுமா?.


கேசவ பலிராம் ஹெட்கேவார் மராட்டிய மாநிலத்தில் படித்து கொண்டு இருக்கும் போது வெள்ளைய அதிகாரி பள்ளியின் உள் நுழையும் போது எல்லா வகுப்பில் இருந்தும் வந்தே மாதரம் ஒலிக்க ஏற்பாடு செய்தார்… அதனால் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு . பின் ஹெட்கேவார் தவிர மற்றவர்கள் மேல் குற்றம் இல்லை என அவரின் பள்ளி படிப்பு மட்டும் தடை பெற்றது. இருந்தும் தன் விடா முயற்சியால் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். அவர் என்ன மராட்டியிலா கோஷம் இட்டார்..


தமிழகம் கொட்டாவி விடும்போது கூட தமிழ் வார்த்தை சொல்லித்தான் விட வேண்டும் .. அப்படி விடாதவன் தமிழனே இல்லை என்று முத்திரை குத்தும் வேலையில் இறங்கி உள்ளவர்களை.. அரசியல்வாதியாக கொண்டு உள்ளது. கடந்த ஐம்பது வருடங்களாக இந்த கூத்து தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. 


அதன் பரிணாம வளர்ச்சி கற்பழித்தால் கூட தமிழனாக இருந்தால் தப்பில்லை. தட்டி கொடுத்தால் கூட வேற்று மாநிலத்தவர் என்றால் அவர் கவர்னர் ஆனாலும் அவர் வயதை கூட பாராமல் பாலியல் குற்றம் சாட்டும் பேச்சாளர்களை வளர்த்துள்ளது. 

.

இதையெல்லாம் தாண்டி எதற்கும் தமிழாக்கம் , எதிலும் தமிழாக்கம் என்று வெறி பிடித்தவர்கள் சட்டம் இயற்றுவோராக அமைவது துரதிர்ஷ்ட வசமாக உள்ளது. 


அப்படி ஒரு முட்டாள் தனத்தை ஒரு சட்ட மன்ற உறுப்பினர் சமீபத்தில் அரங்கேற்றி உள்ளார் .. ஜெய் ஹிந்த் சொல்லாததால் தமிழகம் பீடு நடை போட ஆரம்பித்தது என்கிறார். கேட்டால் நான் ஜெய்ஹிந்த் க்கு எதிரி இல்லை அது எழுதப்படும் ஹிந்திக்கு எதிரி என்கிறார். வெல்க பாரதம் என்று சொல்லி இருக்க வேண்டும் என்கிறார். இதை மத்திய அரசு அனுமதிக்க போகிறதா ?


முதல்வர் பெயர் தமிழில் இல்லையே இனி அவர்களை இவர் விளிக்கவே மாட்டாரா அவையில் . கவர்னர் தமிழர் இல்லையே அவர் அங்கீகரித்த உங்கள் உறுப்பினர் பதவியை ராஜினமா செய்ய போகிறீர்களா ? ஈஸ்வரன்
.
இந்த தேச விரோதியை பார்த்து நாடே கைகொட்டி சிரிக்கிறது. . இதில் சட்டம் தன் கடமையை செய்யாவிடில் ..சட்டம் இயற்றிய மாமேதை அம்பேத்கரை அவமதிக்கும் செயலாகும்


சொல்லுவோம் வந்தே மாதரம்!  உரக்க உரைப்போம் ஜெய் ஹிந்த்.!! ஒழிப்போம் மொழி வெறியை .. உருவாக்குவோம் தேசிய சிந்தனையை .. உறுதுணையாய் நிற்போம் மத்திய அரசிற்கு இது சார்ந்து.  ஜெய்.ஹிந்த்  !!!

!


Published in Dhinasari - 05-07-2021


https://dhinasari.com/general-articles/214069-politics-around-jaihind.html

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home