Monday 6 February 2017

இளைஞர்கள்  கவனத்திற்கு......

ஜல்லி கட்டுக்கு ஒரு பிரச்சினை என்றவுடன்...
ஓடிவந்தாய்..... பலர்க்கு  மெரினாவைதான் தெரியும் ...
ஆனால் பரவலாய்.. தமிழகமெங்கும்  நீ ஆதங்கபட்டாய்..
ஆர்பரித்தாய்.......போராட்ட திடல்களை அலங்கரித்தாய்..
.. அடங்கியது அரசுகள்.வந்தது
...அவசர சட்டம்...
  அலங்காநல்லூர் வகை ஜல்லிக்கட்டுக்காக.
..

...அங்கே திசை மாறியது....போராட்டம்.
...அவதாரமெடுத்தனர்... அக்கிரமக்காரர்கள்.
....ஏதேதோ குழப்பி ...குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைத்தனர்.
,,,,ஏன்
.. உங்களில் சிலரையே கூட இது நிரந்தர சட்டம் இல்லை என நம்பவைத்து
   கழுதறுத்தனர்.
.. சட்டை  எடுத்தாச்சா  நு கேட்டனர் பிள்ளைகள்அ ம்மா சொன்னா
  . எடுத்தாச்சு
   என்று.
    எங்கே காட்டு --- சட்டை துணியை காட்டினாள்.
.....எங்கிருந்தோ வந்த சண்டாளன் கேட்டான்  துணி தானே -இதுவா  சட்டை?.
.....தாயின் மேல் பாசத்தால் சொன்னான் தனையன் ஒருவன் ஆம்
      இது  சட்டை துணி தைத்த பின் சட்டையாகும்.. தாயிக்கு தெரியும்
      எது சரி என்று...
.... காதிலேயே வாங்கவில்லை மற்றொரு பிள்ளை..
......காச்சு மூசென்று ஒரே சத்தம்.... ஓரிரு நாளில்
      தைத்து  வந்தது  சட்டை......வருத்தப்பட்டான் வம்புக்காரன்..

... அது  சரி  எங்கே அந்த சண்டாளன்  இது சட்டையா  என்று  வம்பு மூட்டி விட்டவன்.... அதானையா  இது  நிரந்தர  சட்டமா  என்று சத்தம் போடாமல்
வதந்தியை கிளப்பினானே... எங்கே அவன்..
சிந்தித்தாயா  ?  இளைஞனே..
.
.
இனிமேலாவது  விழித்து கொள்  உன்னை கொள்ளை அடிக்க..
உன் வளத்தை கொள்ளை  அடிக்க..
உன் உழைப்பை  கொள்ளை அடிக்க...
காத்திருக்கிறது ஒரு  தேச விரோத  கும்பல்..
செங்கொடி  என்பான்  சீனா  என்பான், ரஷ்யா என்பான்.
நம் தேசத்திற்கு சம்மந்தமே இல்லா தலைவர்களை
உன் தலைவநென்பான்...உன் தலையை தடவிவிடுவான்
..
இளைஞனே  நீ வருங்கால  பாரதம்...
.
தவறியும் இவர்கள்  சதியில்  வீழ்ந்து விடாதே..
.
சுயநலமற்ற நம் தேச  தலைவர்களை உள்வாங்கு..
.
தேசத்தை வலுப்படுத்து..... பாரதம்  விழித்தெழும்..
.
அதனால் ... உலகின்  குருவாய்
பாரதம் அமையும்...
சுவாமி விவேகானந்தர் கண்ட கனவு நினைவாகும்

ஜெய் ஹிந்த் 

Thursday 2 February 2017

இன்று  ரத சப்தமி. .

உத்திராயண புண்ய காலம் ஆரம்பம்.

தட்சிணாயனம்,  உத்திராயணம்.... அது என்ன  அயனம்  என்றால் பாதை. தட்சிண, உத்திர  என்றால்  முறையே  தெற்கு மற்றும் வடக்கு.
அதாவது  சூரியன்  கிழக்கே உதித்தாலும் அதன்  பாதை  தெற்கு  அல்லது வடக்கு  நோக்கி மாறுவது..

என்னுடைய  கல்லூரி காலங்களில்  ஒரு நாள் என் கைவல்ய  தெரு  வீட்டு (கிழக்கு பார்த்த  வீடு ) முகப்பில் எதிர் வீட்டு மரத்தின் நிழலை கவனித்ததில் சிறுது துணுக்குற்றேன் . என்ன  இது நிழல் ன் கோணம் கிட்டத்தட்ட 90 டிகிரி  மாறுகிறதே.  எனக்கு........ என்ன கவலை இருக்கவே இருக்கிறார்  நடமாடும்  களஞ்சியம் ( The walking Encyclopedia)  என் தந்தை  , அவரிடம் கேட்டேன் .  அப்பொழுது இந்த உத்திராயணம் , தட்சிணாயணம் பற்றியும்  உலக உருண்டையின் பாதை மாற்றம்  அது  சம்பந்த பட்ட  relative motion பற்றியும்  தெளிவாக  எடுத்து கூறியதோடு மட்டு மல்லாது, ரத சப்தமி போன்ற சடங்குகள்  செய்வதால்  பல லட்சம் வருடங்களாக இந்த செய்தி என் மூதாதையர் மூலமாக என்னையும்  இதன் மூலமாக நம் சந்ததியனரையும் சென்றடைகிறது. கூடவே என்ன செய்தி  என்றால் நம் முன்னோர்கள் எவ்வளவு  அறிவியல் பூர்வமானவர்கள் என்பதற்கும்  பாரத நாடு , சனாதன தர்மம்  வானவியல் சாஸ்திரத்தில்   உலகில் முன்னோடி  என்பதற்கும் இதுவே சான்று  என்று  கூறினார்  அதின் இன்று  நினைவு கூர்வதில்  பெருமை அடைகிறேன் ......... ஞா.சூ