Saturday 10 October 2020

 அரசியல் என்ற பித்தலாட்டத்தை முன்னெடுத்து கோடி கோடியாய் கொள்ளை அடிக்க ஹிந்து மதமும் வர்ணாசிரமும் பலி கிடா ஆக்க பட்டது.

.
ஹிந்து மதம் எந்த விஷயத்தையும் சட்டம் ஆக்கி யார் மீதும் நிர்பந்திக்க வில்லை . உதாரணத்திற்கு எல்லா ஹிந்துவுக்கும் பூணல் உண்டு. பூணலை நிராஹரித்தவனை யார் எந்த நிர்வாகி தண்டனை கொடுத்து துன்பபடுதினார். கடவுளை கும்பிடாத கோயிலுக்கு வாராத ஏன் கடவுளையே இல்லை என்று சொன்ன ஹிந்துவையும் ஹிந்துமதம் எந்த நிர்பந்தமும் இல்லாமல் ஏற்று கொண்டு தான் இருந்தது. (ஆனால் மற்ற எந்த மதத்திலும் இது நடக்காது ) ஆனால் ஏதோ சில திணிக்கப்பட்ட பழக்க வழக்கம் சார்ந்து தீண்டாமை (அப்படி எதுவும் எந்த ஹிந்து தர்மத்திலும் இல்லாத போதும் ) பழக்கத்தில் இருந்தது.
.
கொள்ளை யடிக்க உள்ளே வந்த கொள்ளை காரர்களான இஸ்லாமியர்களும் , கிருத்துவர்களும் கூட அந்த தீண்டாமையை அப்படியே தான் கடை பிடித்தனர். உருதில் தேடு என்ற வார்த்தை தாழ்த்தப்பட்டவர்களை நோக்கி பிரயோக படுத்த பட்டு வந்தது . எந்த வேலையிலும் தேடு க்கள் ஒதுக்க பட்டே வந்தனர். .. கிறிஸ்தவர்கள் இனி வேறு எந்த முறையிலும் நாடு பிடிக்க முடியாது என்ற உடன் மதமாற்றத்தை கையில் எடுத்தனர்.. அப்போது பொருளாதரத்தில் கீழ் நிலையில் இருந்த ...மக்களால் ஒடுக்க பட்டவர்களை பால், ரொட்டி, சலுகைகள் கொடுத்து ஏமாற்ற முடிந்தது. அதுவே பின்நாளில் பெரும் வியாபாரமாக ஊற்றெடுத்து இன்று அந்த பணம் காய்க்கும் வியாபாரம் பெரும் பிரவாகமாய் ஓடுகிறது.
.
சரி சுதந்திரம் அடைந்த பின் இந்த சமூக அவலம் நீக்க பட எந்த தடையும் இல்லை ..... சட்டம் இயற்றுதல் நம் கையில் .. தாழ்த்தப்பட்ட என்ற சமூகம் முன்னேற வேண்டும் .. அவர்களை அவர்களின் வறுமை வைத்து அடையாளப்படுதாமல் ஏன் சாதியை வைத்து அடையாளப்படுதினார்கள். இப்படி செய்தால் தான் அரசியல் கட்சிகள் காலம் தொட்டு ஹிந்து மதத்தை நீர்த்து போக செய்ய முடியும். அதற்காக மாற்று மதத்திடம் காசு வாங்க முடியும்.
.
ஹிந்து மதத்தின் எந்த சட்டமும் இப்போது ஆட்சியில் இல்லை ஆனாலும் ஒரு வர் ..ஓ நீங்க தனி தொகுதி MLA வா .. என்று mla, mp போன்றோறரை கேட்கிறார்கள் என்றால் தீண்டாமை தனி தொகுதி என்று சொல்லும் இந்திய சட்டத்தில் தான் உள்ளதே தவிர ஹிந்து மதத்தில் இல்லை.
.
ஆ. ராசா என்ற பட்டியல் இன சகோதரர் தீண்டாமை கொடுமைகள் எல்லாம் தாண்டி முன்னேறி . so called முன்னேறிய வகுப்பு என்பவர்கள் பெறும் வசதிகளை விட அதிக வசதி கொண்டவராக இருக்கிறார். வாழ்க்கை நிலையில் முன்னேற்றம் கட்சியில் முன்னேற்றம், பொருளாதாரத்தில் கேட்கவே வேண்டாம் .. ஆனால் அவர் தொகுதி தனி தொகுதி என்ற தகுதி இழந்தவுடன் அவர் ஏன் இன்னொரு தனி தொகுதி தேடி தன்னை தாழ்த்தப்பட்டவர் என்று அடையாள படுத்தி கொள்கிறார் எந்த விதத்தில் அவர் தாழ்த்த பட்டவர்?.. இவர் நீலகிரியில் நின்றதால் என்ன ஆயிற்று யாருக்கு நஷ்டம் இன்னொரு பட்டியல் இன சகோதரர் அனுபவிக்க வேண்டிய அரசின் சலுகையை.. அதாவது மீன் அனுபவிக்க வேண்டிய சலுகையை, உண்டு கொழுத்த திமிங்கிலம் அனுபவிப்பது எந்த விதத்தில் ஞாயம்.
.
ஹிந்து மதத்தையே நிராகரிக்கும் ராஜா, திருமாவளவன், ரவிக்குமார் போன்றோர் , ஹிந்து பட்டியல் இனம் சேர்ந்தவர் எப்படி ஆவர் ..இவர்களை தீண்டாமை அடையாளம் கொண்டவர்களாக கொண்டு பட்டியல் இனம் என்றால் அப்படி சொல்வது ஹிந்து தர்மமா?, இந்திய அரசியல் அமைப்பு சட்டமா?. அப்போ தீண்டாமைக்கும் ஹிந்து தர்மத்திற்கும் சம்பந்தம் இல்லை தானே ... ஆக பட்டியல் இன ஒதுக்கீடு என்ற இந்த சட்டம் மதம் சார்ந்து இருப்பதை நீக்க பட்டு பொருளாதாரம் சார்ந்து மாற்ற பட வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து..
.
இது கனவாகவே போய் விடுமா?.............GSN