Thursday 19 August 2021

உரத்த சிந்தனை

 

அனைவரும் அர்ச்சகர் ஆகவேண்டும்  .

அனைவரும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் . ஏன் அனைவரும் அர்ச்சகர் ஆகக் கூடாதா ? . நாடு மக்கள் நிறைந்தது. மக்களும் நாடும் ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளனர். நாட்டின் முன்னேற்றம் பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். மக்களின் முன்னேற்றம் பற்றி நாடு சிந்திக்க வேண்டும். இது எது முதலில் என்றால் கோழியில் இருந்து முட்டையா முட்டையில் இருந்து கோழியா ? என்ற கேள்வி முந்திக் கொண்டு வந்து நிற்கும்.

இந்த மக்களை நிர்வகிக்க ஒரு நிர்வாகம் தேவை. அந்த நிர்வாகம் ஜனநாயக நாட்டில் இரு மடிப்பாக உள்ளது (bifold).. அதாவது நிரந்தர நிர்வாகிகள். நிர்வாகிகளின் நிர்வாகிகள் என்று உள்ளது. நிரந்தர நிர்வாகிகள் தங்கள் திறமையை தங்கள் படிப்பு மற்றும் அனுபவத்தால் நிரூபித்து பொறுப்பில் அமர்பவர்கள். ஆனால் இவர்களை நிர்வகிக்க ஜனநாயகம் மக்கள்  பிரதிநிதிகளை பணியில் அமர்த்துகிறது. ஐந்தாண்டு க்கு ஒரு முறை அவர்கள் மக்களை சந்திக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனையாக மக்கள் அவர்களை நிராகரிப்பர். மக்களை சந்திக்கும் போது மக்கள் இந்த பிரதிநிதிகளை  நிற்க வைத்து கேள்வி கேட்பார். இந்த பயம் அவர்களை ஆட்சியை சரியான பாதையில் வழி நடத்தும் .. இந்த நம்பிக்கையில் தான் ஜனநாயகம் மக்கள் பிரதிநிதித்துவத்தை வைத்தது.

ஆனால்.... ஒரு பகுதியில் ஒரு ரவுடி மிகவும் செல்வாக்காக இருந்தால் கண்டிப்பாக அவன் மக்கள் பிரதிநிதி. ஒரு பகுதியில் சுற்று சூழலை கெடுத்து அதிக வருமானம் ஈட்டும் பெருமுதலாளி ஓட்டை காசு கொடுத்து வாங்க முடியும் என்றால் அவர் மக்கள் பிரதிநிதி மட்டுமல்ல சுற்று சூழல் அமைச்சர் ஆகவே கூட ஆக முடியும்.

அப்படி ஆனால் அந்த துறையில் மெத்த படித்த நிரந்தர நிர்வாகி இருந்தும் அதனால் என்ன பிரயோஜனம் ஆகி விடப் போகிறது. ஆக.. படிப்பை. செல்வாக்கு சாகடிக்கிறது. இன்னும் கேவலம் இவர்கள் எங்கோ எப்போதோ ஏதோ ஒரு தவறான சித்தாந்தத்தை பற்றி கொண்டு இருப்பார்கள் .. இவர்கள் வெற்றி பெற்றால் மக்கள் பற்றி கவலை இல்லை இவர்கள் சித்தாந்தை பற்றித்தான் கவலை.

 இந்த பிரதிநித்துவ அரசியலால்... நாடு மக்களுக்கானது  என்ற அடிப்படை ஆட்டம் கண்டு விடுகிறது.  ஒருவன் தனக்கு முந்தைய ஆட்சியாளரை எந்த திட்டத்தை எல்லாம் எதிர்த்து பெயர் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படுத்துகிறானோ.. அதே திட்டத்தையே பெயர் மாற்றி தன் ஆட்சியில் கொள்ளை அடிக்கிறான். மக்களுக்கு பூ வுனாலும்  புய்ப்பம் என்றாலும் ஒன்றுதான் என்று புரிவதே இல்லை.

இதை எல்லாவற்றையும் விட மோசம் நிர்வாகம் என்பது மக்களுக்கு ஆன திட்டங்களை வகுக்க தான் ..அவர்கள் வாழ்க்கைய விமர்சிக்க / அதை மாற்றி அமைக்க இல்லை.

ஒருவர் தன் வசதிக்கு வேட்டி சட்டை போடுவார், வேறு ஒருவர் வேட்டி ஜிப்பா போடுவார்.  வேட்டி சட்டை போடுபவன்தான் தமிழன், ஜிப்பா போடுபவன் எல்லாம் வந்தேறி , இனி யாரும் வடக்கு இந்திய ஜிப்பா போடக்  கூடாது என்றெல்லாம் சட்டம் இயற்றக் கூடாது. அது போல்  என்னுடைய வழிபாட்டு முறை என்ன என்பது தொன்று தொட்டு உள்ளது, ஆட்சிக்கு வந்தததால் அதை ஆட்சியாளர்  நிர்ணயிக்க முடியாது. ஆனால் இங்குதான் ஓட்டரசியல் வேலை செய்கிறது. மேலே சொன்ன “நீ நிர்ணயிக்க முடியாது” என்று சொல்லும் அதிகாரம் எண்ணிக்கையை வைத்து அங்கீகரிக்கப் படுகிறது.

தொன்று தொட்டு ஹிந்துக்கள் சித்திரை மாதத்தை ஒட்டி புத்தாண்டை கொண்டாடு கின்றனர். கிருஸ்தவர்கள் ஜனவரி மாதத்தை ஒட்டி புத்தாண்டை கொண்டாடுகின்றனர் .  முஸ்லிம்கள் முஹர்ரம்   மதத்தை ஒட்டி புத்தாண்டை கொண்டாடு கின்றனர்.

ஆட்சிக்கு வந்த எனக்கோ , என் குடும்பத்திற்கோ , இல்லை என்னை வளர்த்து விட்டவர்களுக்கோ, என் இயக்கத்திற்கோ  இதில் உடன்பாடு இல்லை என்றால் ..  மக்கள் மேல் ஒரு சட்டத்தை போட்டு .....இல்லை இல்லை இனி இந்துக்களுக்கு 10வது மாதம் தை தான் புத்தாண்டு.  கிருஸ்தவர்களுக்கு ஏசு பிறந்த டிசம்பர் மாதம் முதல் தேதிதான் புத்தாண்டு. முஸ்லிம்களுக்கு ரமலான் மாதம்தான் புத்தாண்டு என்று சட்டம் இயற்ற முடியாது.

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக ஓட்டு வங்கி அரசியலில் பின்னால் சொன்ன இரண்டையும் சொல்ல துணிவு யாருக்கும் வர வில்லை.

அது போலதான் இன்னொரு சட்டம் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஒரு சட்டம். அவசரக் கோலமாக அள்ளி தெளிக்கப்பட்டு இருக்கிறது. அர்ச்சகர் என்பது இறை சேவை செய்யும் ஒரு பதவி.. இதற்கு பெரிய சம்பளம் எல்லாம் ஒன்றும் கிடையாது. அர்ச்சகர்களும் , ஒரு பெயிண்டர் எலேக்ட்ரிஷன் போல ஒரு தொழிலாளி . சோத்துக்கே கஷ்டப்படும் பெயிண்டர் உண்டு. காண்ட்ராக்ட்கள் பல எடுத்து மிக வசதியாக வாழும் பெயிண்டர்களும் உண்டு. அது போல் தான் அர்ச்சகர்களும்.

 ஆனால் நாத்திக வாத அரசுகள் அர்ச்சகர்களை அசிங்கப் படுத்த  ஏன் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்றால் .. ஆகமக் கோயில் அர்ச்சகர்களாக ஒரு சாதி மக்கள் மட்டுமே உள்ளனர் இவர்களை நாத்திக வாதிகளுக்கு பிடிக்காது. பிடிக்காது என்பதை விட அவர்களின் மூலதனமே இவர்கள்தான். செந்தில் என்று ஒரு நடிகர் உண்டு .. அவரை அடிக்க அடிக்க தான் கவுண்டமணி என்பவரை வைத்து ஜோக் உருவாக்க முடியும் .. காசு பார்க்க முடியும். கவுண்டமணி வலிமை மிக்க ஹீரோ-வை அடிக்கவே மாட்டார்... அது போல இவர்கள் அரசியல் வியாபாரம் நடக்க பலி ஆடு அந்த ஒரு சாதி.. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் கேட்க நாதி இல்லை. அதை விட இந்த முயற்சிகள் எல்லாம்  ஹிந்து மதத்தை பலவீனம் அடைய செய்ய என்பது பொது மக்களுக்கு புரியாத விஷயம்.

ஆனால் நாம் அனைவரும் அர்ச்சகர் ஆவதை வரவேற்க வேண்டும்.

ஏன் என்றால் நாட்டில் இட ஒதுக்கீடு என்ற ஒரு அவலம். (ஆரம்பத்தில் அது சரி ஆனால் இப்போது அது அவலம்) அதற்காக நடக்கும் ஒப்பீடே ..அட அர்ச்சகர் எல்லாம் உயர் சாதி .. நான் என்ன தாழ்ந்த சாதியா  என்று கேட்டுதான் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள், மதம் கூட மாற்றுகிறார்கள் . இப்போதுதான் அனைவரும் அர்ச்சகர் ஆகலாமே இனி இந்த இட ஒதுக்கீடை படிப் படியாக குறைக்க சொல்லி கேட்க இந்த அனைவரும் அர்ச்சகர் சட்டம் உதவும்.  ஆகையால் வரவேற்கிறோம்.

 

மேலும் ஒரு அர்ச்சகர் இறைவன் தொண்டை செய்ய கடை பிடிக்க வேண்டிய ஆச்சார அனுஷ்டானங்கள் எந்த சாதிக்கும் சொந்தமானது அல்ல.

ஆகையால் அர்ச்சகர் பயிற்சிக்கு போவோர்க்கு கீழ்கண்டவைகளை சொல்லி கொடுப்போம் என்று உறுதி கொடுக்காத வரை இந்த சட்டத்தை ஹிந்துக்கள் அனைவரும் ஆதரிக்கக் கூடாது. ஏன் என்றால் இது இந்து ஹிந்து மதத்தின் மீது மட்டும் உள்ள திணிப்பு , நம் தெய்வம், நம் வழிபாட்டு முறை மீதான ஒரு சட்டம். அதன் மேல் சட்டம் போட ஒரு அரசிற்கு அதிகாரம் இல்லை .. அதையும் மீறி போடுகிறது என்றால் அதில் என்ன தேவை என்பதை சொல்ல நமக்கு முழு அதிகாரம் உள்ளது ..

அர்ச்சகர்கள் பணிபுரியும் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் நாம் தான் நமக்கு என்ன வேண்டும் என்று கேட்க வேண்டும் ஆகையால் கேட்கிறோம் . அரசே செவி சாய்ப்பீர்

 .
.
அர்ச்சகர் ஹிந்து கோவிலில் தான் அர்ச்சகராக நியமிக்கப் படுகிறார் ஆகையால் அவர் ஹிந்து தர்மம் சொல்லும் ஆச்சாரப் படி தங்கள் இல்வாழ்க்கையை நடத்த வேண்டும். அதன் முதல் படி

v  கடவுள் உண்டு....

v  கடவுளை படைத்தவர் என்றெல்லாம் ஹிந்து மதத்தில் யாரும் இல்லை, இது தர்மம் அடிப்படையில் ஆனது ஆகையால் சனாதனம் எனப் பெயர் பெற்றது ..

v  கடவுளை வணங்குபவனே அறிவாளி. 

v  கடவுள் இல்லை என சொல்பவன் இழி பிறவி.

v  கடவுளை கற்பித்தவன் முட்டாள் (ஹிந்து மதத்தில் இல்லை என்றாலும் நம் சகோதர மத்தில் நபி பெருமானும், ஏசு பிரானும் உள்ளனர் ) என்று சொல்பவன் காட்டு மிராண்டி.

v  இறை நம்பிக்கை கொண்டவர்கள் , அடியவர்கள், ஆழ்வார்கள் ஆகியோரை  இழிவு செய்பவர்கள் தூக்கிலடப் படவேண்டியவர்கள்.

v  நாத்திகம் என்பது அழிவு.. நாத்திகன் என்பவன் சண்டாளன். 

இவற்றோடு கீழ்க்கண்ட இவை கற்பிக்கப் பட வேண்டும்.:

·         இல்லாள் தீட்டு, குழந்தை பிறந்த தீட்டு, சவரத்தீட்டு, பங்காளி தீட்டு என்பவை கடை பிடிக்கப் பட வேண்டும்.

·         புலால் உண்ணக்கூடாது.

·         பீடி சிகரெட், லாகிரி வஸ்து உபோயோகிக்க கூடாது.

·         பஞ்சகச்சம், குடுமி இத்யாதிகளுடன்தான் பொது வாழ்க்கையிலும் ஈடு பட வேண்டும்.

·         ஆகமக்கோயில்கள் சனாதன தர்மத்தின் ஆணி வேர்கள்.

·         சனாதன தர்ம எதிரிகளோடு தொடர்பு உடைய யாரும் பணியில் இருந்து உடனடியாக நீக்கப் படுவார்கள் .

·         சிவன் , விஷ்ணு, பிரம்மா, வேதம், ஆகமம், உபநிடதம், கீதை, பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்யப் பிரபந்தம் மற்றும் அணைத்து தமிழ், சம்ஸ்கிருத ஆச்சார நூல்கள்  ஆகியவை புனிதம் இதை இழிசொல்லால் பேசுபவனை மோதி மிதிக்கவும் அர்ச்சகர்கள் தயங்கக் கூடாது.

·         அர்ச்சகர் வீட்டு பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை தரப் படவேண்டும்.

·         அர்ச்சகர் ஆக அனைவரையும் ஆக்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு கவுரமான இந்த பதவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் , தாசில்தார் போன்றவர்களுக்கு இணையான சம்பளம் அளிக்க வேண்டும்.

இது இல்லாமல் பத்தோடு இது ஒண்ணு இத்தோடு சேர்த்து பதினொண்ணு என்று ஏற்கனவே வறுமையில் உழலும் அர்ச்சகர் போல் புது அர்ச்சகர்களும் ஆகும் பட்சசத்தில் ஹிந்துக்களின் கோயில்களில் நிர்வாக சீர்கேடு வரும் . கடவுள் நிந்தனை பலவும் நடக்கும் அது தேசத்திற்கே கேடு விளைவிக்கும்..

அரசு நாத்திக அரசாக இருந்தாலும் .. தான் ஆட்சியில் இருக்கும் வரை எந்த ஒரு இடத்திலும் நாத்திகத்தை தலைத் தூக்க செய்யக் கூடாது. ஏன் என்றால் உங்களை தேர்ந்தெடுத்தவர்களில் (உங்கள் மனைவிமார்களையும் சேர்த்து )  நாத்திகர்களின் பங்கு வெகு சொல்பமே..  

ஆகையால் ஒரு சட்டத்தை அறையும் குறையுமாக இயற்றுவது பெயரளவில் வேண்டுமானால் வெற்றியாகும்.. ஆனால் ஹிந்து தர்மத்தை நிர்வகிப்பதில் அதில் தோல்வியையே சந்திக்கும். நீங்கள் ஹிந்துக்கள் ஓட்டையும் வாங்கித்தான் ஆட்சிக்கு வந்து உள்ளீர்கள் .. அரசே முதலில் மேற்சொன்ன சட்டங்களுடன் செயல்படுங்கள் அனைவரையும் அர்ச்சகர் ஆக்குங்கள் வரவேற்கிறோம். 

 

G.Surya Naryanan, B.Sc.,B.Ed.,PGDCA

சமூக ஆர்வலர், வலைப்பூ எழுத்தாளர்,

செயலர் தெய்வத் தமிழ்ச் சங்கம், விழுப்புரம்.   

Monday 16 August 2021

 

இணைவோம் தேசிய நீரோட்டத்தில். படைப்போம் வலிமை மிக்க பாரதம்.

 

தெரிந்தோ தெரியாமலோ இம்முறை திமுக ஜெயித்து இருப்பது தமிழகத்திற்கு நல்லது . ஒரு வழியாக தீரா விடம் அழிய இது வழி வகுக்க வாய்ப்பு இருக்கு .



திமுக, அதிமுக மாறி மாறி அரசியல்..இதனால் தமிழிற்கும் தமிழகத்திற்கும் என்ன லாபம் ?

.

ஆட்சி மாறும் போதெல்லாம் செம்மண் குவாரி ஊழல், மணல் குவாரி ஊழல், பாலம் கட்டிய ஊழல் , சொத்து குவிப்பு ஊழல், வேலை வாய்ப்பு ஊழல் , கூவம் ஊழல் ,

.

இப்படி இவர்கள் கதை நாறுகிறது. இதற்கு முன் இருந்தது தேசிய அரசியல் .

.

தேசிய அரசியலில் மிராசுதார்கள் இருந்தார்கள் , தேசிய வாதிகள் இருந்தார்கள், ஆன்மிக வாதிகள் இருந்தார்கள்.

.

ஆகையால் சொத்து குவிப்பு இல்லை, தேச விரோத சக்திகள் இல்லை, பொய் இல்லை , இரட்டை நாக்கு குற்றச்சாட்டுகள் இல்லை, இலவசங்கள் இல்லை ரவுடி ராஜ்ஜியம் இல்லை.

.

தமிழிற்கும் தமிழகத்திற்கு துளியும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத

திராவிடம் என்ற வெளிநாட்டு ஏஜன்ட்களால் புகுத்தப் பட்ட சித்தாந்தம் பரவியது.
அட அந்த கேவலதிற்குள் தான் எத்தனை சண்டைகள் எத்தனை பித்தலாட்டங்கள் . நாத்திகர்களும், பித்தலாட்ட காரர்களும் ஜாதி பார்த்து அரசியல் செய்பவர்களும், மதம் சார்ந்த பிண அரசியலும் தான் இருக்கிறது.  இரண்டு விஷ ஜந்துக்கள் அடித்து கொண்டன ஆனால் மக்கள் தவறாக இந்த ஜந்து தேவலையா அந்த ஜந்து தேவலையா என்று போட்டி போட்டு அரை நூற்றாண்டிற்கும் மேல் வீணடித்து விட்டனர். பாணி பூரிகாரன் என்று சொன்ன மாநிலங்கள் உபரி வருவாய் நிதி நிலை அறிக்கை அளிக்கிறது ஆனால் பாருங்கள் மக்களே நீங்கள் தேர்ந்தெடுத்த இவர்கள் சொல்கிறார்கள் நாங்க வந்ததில் இருந்து இது வரை நடந்த ஆட்சிகளின் பலன்கள்....  இங்கு ஒவ்வொருவர் மீதும் 2.6 லட்சம் கடன் இருக்கிறது எங்களால் என்ன செய்ய முடியும் என்று ஐ.பி. நோட்டீஸ் கொடுக்கிறார்கள். முழுக்க முழுக்க முன்னிற்கு பின் முரண். . ஒரு அமைச்சகத்திடமும் தெளிவு இல்லை. 

ஆக இதுவே கடைசி திராவிட ஆட்ச்யாக இருக்கட்டும் . திரும்புங்கள் தேசியத்தின் பக்கம் .. இணைவோம் தேசிய நீரோட்டத்தில். படைப்போம் வலிமை மிக்க பாரதம். பாரதி, விவேகானந்தர் கண்ட கனவுகளை நினைவாக்குவோம்.


This letter appeared in dinamalar dt.15-8-2021 



Monday 2 August 2021

 

எந்த திட்டத்திலும் வறுமை யில் வாடுவோர் மட்டுமே பயன் 

பெற வேண்டும்

தன் சொந்த மக்களை நசுக்கும் சட்டங்களை இயற்றியது இந்தியா வாக மட்டும் தான் இருக்கும் .. இதை கேட்க நாதி அற்று போனது இந்த அரசியல் ஆக்கிரமிப்பு சுதந்திர நாட்டில் . அரசியல் லாபங்களுக்காக இந்த நாட்டின் ஒரிஜினல் பூர்வ குடி ஹிந்துக்களுக்கு எவ்வளவு தொல்லைகள் .

 ஹிந்துக்களின் பூர்வ குடிகள் , ஹிந்துக்களின் ஆணி வேர் ஆன பிராமிணர்கள் மேல் அபாண்ட பழி சுமத்தும் அரசியல் அமைப்புகள் .. இது ஹிந்துக்களை பலவீன படுத்தி மாற்று மதம் வளர வழிவகை செய்கிறது  . இன்னொரு பக்கம் அடித்தட்டு மக்களை இழிவு படுத்தும் தலித் என்ற சொல்லாடல் கொடுத்து ..அவர்களின் இந்த அடைமொழி போக வேண்டுமானால் மதம் மாறுங்கள் என்ற தூண்டுதல் .

ரொட்டிக்கும் , வன்முறைக்கும் மதம் மாறிய மக்களே இன்று பெரும்பாலான ஹிந்து அல்லாத மாற்று மதத்தினர். இவர்களுக்கு சலுகை என்ற பெயரில் பூர்வ குடி மக்கள் பலவாறாக வஞ்சிக்கப் படுகிறார்கள் . ஹிந்து வுக்கு ஒரு சட்டம் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம். 

ஹிந்து ஒரு கல்வி நிறுவனம் வைத்தால் அவர்களுக்கு  ஒரு சட்டம். சிறுபான்மையினர் ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பித்தால் அவர்களுக்கு சலுகை  சட்டம். 

நாட்டை ஆண்ட அந்நியன் இந்த நாட்டின் சொத்துக்களை அபகரித்தான் அங்கு அவனின் வழுபாட்டு தலங்களை நிறுவி அதை பாது காக்க இங்கு இருப்போரை மதம் மாற்றினான்.  அங்கெல்லாம் கல்வி நிலையங்கள். அவைகளெல்லாம் செழிப்பாக இருந்தாலும் அவைகள் சலுகை பெரும் நிறுவனங்கள் .. ஆனால் ஆஸ்ரமங்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. இந்நிலை மாறனும் படிப்படியாக சலுகைகள் இல்லாத ஆட்சிகள் வளரனும். தேசமெங்கும் ஒரு சட்டம் இருக்கணும். 

எந்த திட்டத்திலும் வறுமை யில் வாடுவோர் மட்டுமே பயன் பெற வேண்டும். இந்த நிலை பாரதத்தில் என்று வரும். 75 வது சுதந்திர ஆண்டில் இந்திய அரசியல் கட்சிகள் இதை நோக்கி பயணிக்க வேண்டும். இதனால் உருவாகும் இந்தியாவே உண்மை சுதந்திர இந்தியாவாக இருக்கும்.

 ஜெய்ஹிந்த்.