Wednesday 24 November 2021

 

பணம் படைத்தவன் வைத்தது தான் சட்டமா?

நீட் தேர்வு இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பணம் படைத்த தனியார் மருத்துவ கல்லூரி அதிபர்கள். இவர்களின் தூண்டுதலில் நீட் தேர்வை தமிழகத்தில் எதிர்க்கிறார்கள்.
நீட் தேர்வால் பலர் பயனுற்றுள்ளனர், சில கோழை மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இதில் அனிதா போன்றோர் தவறாக வழி நடத்தப்பட்டதால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். உலக வாழ்வில் வானூர்தியால் சிலர் இறக்கின்றனர், பேருந்து, புகைவண்டி, பலவித பொது தேர்வுகள் இவற்றால் பலர் இறக்கின்றனர். இதற்காக மேற்சொன்ன எல்லாவற்றையும் நிறுத்த முடியுமா? நீட் தேர்விற்கு மட்டும் இப்படி ஒரு டூல் கிட் ஏன் ஏற்படுத்துகிறார்கள் . அதே சமயம் காதல், கள்ள காதலால் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக  தற்கொலை, கொலை, கொள்ளை, கழுத்தறுப்பு, கொடூர கொலை இப்படி நடந்து கொண்டே இருக்கிறது இதற்கு முக்கிய காரணம்  சின்ன திரையும், பெரிய திரையுமே. சில்லுனு ஒரு காதலில் ஆரம்பித்து கைகுட்டையில் காதல் கடிதம் வரைக்கும் ஒரு பெரும் ஆராய்ச்சியே பண்ணி விட்டார்கள். பெண்களை  துரத்தி துரத்தி காதல் வலையில் விழ செய்வதையே பிரதானமாக காவியங்கள் ஆக்கி பல நடுத்தர குடும்பத்தை சீரழித்தவர்கள்  கோடீஸ்வரர்கள் . ஆனால் இவ்வளவு கொலை கொள்ளை க்கு காரணமான திரை படங்களுக்கு தடை என்று பேசாத எல்லா அரசியல் வாதியும் , அறிவு சம்பந்தப் பட்ட நீட் க்கு தடை கேட்கின்றனர். இரண்டிலும் விஞ்சி நிற்பது பணம் படைத்தவன் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான்... சட்டம் எல்லாம் ஏழைக்கு மட்டும்தானா ?


This letter got published in ithu ungal idam dt.23-11-2021  dinamalar




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home