Monday 30 January 2017

எதற்காக இந்த வியாபாரம்.

தொலைக் காட்சிகள் , திரைப்படங்கள், இவை  மக்களிடையே எதை வியாபாரம்  செய்ய முனைகின்றன .
நமகெல்லாம்  பொழுது போக்க அவதாரம் எடுத்த இவர்கள். பொழுதுபோக்காக  பல விஷ விதைகளை  தூவி சமுதாய  வாழ்க்கை  என்பதில் உள்ள அமைதி, சந்தோஷம்  என்ற  மரங்களை  வெட்டி  மக்கள் வாழ்வியலை  சுடுகாடாக ஆக்க முற்படுகின்றன.
ஒரு தொலை காட்சி  விளம்பரம் பெற்று  திரைப்பட பாடலை ஒளிபரப்பி காசு  பார்க்கிறது.  இது நேயர் விருப்பமாக  நடாத்துகிறது. நேயரையும் நிகழ்ச்சியையும் ஒருங்கிணைக்க அவ்வப்போது  ஆண், பெண்  இரு பாலரிலிருந்தும் ஒருங்கிணைப்பளர்கள்  ,  anchor என்று ஆங்கிலத்தில் சொல்பவர்கள் ஒருங்கிணைப்பர்கள். ஒரு அழைப்பாளர் - அழைப்பவர் பெண், ஒருங்கிணைப்பளரும் பெண். ஏதாவது  பேச வேண்டும்  என்று பேசுகிறார். " அப்புறம்  என்ன பண்றீங்க  படிக்கிறீங்களா?  காதல் பண்றீங்களா?" என்று  வினவுகிறார்.
எனக்கு புரியவில்லை.  பெண்ணை படிக்கிறீர்களா? எங்காவது  வேலை செய்கிறீர்களா? நீங்கள் எதிலேனும் சிறந்தவரா? இப்படி ஒரு கேள்வி கேட்கலாம் ........... காதல் பண்றீங்களா? என்ற  கேள்வி கேட்க    என்ன  நோக்கம். போற போக்கில்  அந்த பெண் மணி ஆமாம் காதல் பண்ணுகிறேன்  என்று சொல்லி இருந்தால் .... எத்தனை பேரை என்று கூட கேட்க துணிந்தவர்கள்தான் இந்த தொகுப்பாளினிகள்.
.
.
.
நல்ல வேளை  அந்த பெண்மணி  நான் திருமண ஆனவள்  என்று  பதில் சொன்னார்கள்...
.
.
தொடர்வோம் இந்த அவலம்  பற்றிய சிந்தனைகளை..............

ஞான.சூரிய நாராயணன்  ஆகிய  நான்  மிக  நன்கு  அறிவேன்  நான் ஒரு  ஞான சூன்யம்  என்று. இருந்தாலும்  அதில் இருந்து  விடுபட்டு ஞானம் பெற  உலகை அறிய இதுகாறும்  பயணித்து கொண்டுதான்  இருக்கிறேன். இப்பயணத்தில் நான்  பாடமாக பெற்றது அதன்  மூலம்  நான்  பெற்ற  சிறுதளவு  அறிவு  அதை மக்களோடு  பகிரவே இந்த  வலைப்பூ. நான் சொல்வதே  சரி என்று  நான் வாதிட  விரும்ப வில்லை . நான் சொல்வது முழுவது  தவறு  என்று எது இருக்குமோ  அதை நான்  பதியவே மாட்டேன்  என்பதால். என் பாடங்களை  அதாவது  நான் பதிவது  உலகை நான்  கற்கையில் உள்ள பாடங்கள். அவற்றில்  குறை  இருப்பின்  தயவு செய்து என்னை திட்டாமலும்  பதிவில் சம்பந்த பட்டோரை திட்டாமலும் சுட்டி காட்டலாமே..

 நன்றி  ஞா.சூ