Sunday 20 December 2020

 

பாரதி கண்ட புதுமை பெண்.

இந்த வரிகளை வைத்து இன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடி விட்டது நாகரீகம். மின் மினி பூச்சிகளாய் சிறிது கால வாழ்க்கை வாழ்ந்து மடிந்து போகும் பல பெண்களை இப்பொழுது காண முடிகிறது. காரணம் என்ன ?  நம் சிந்தனைக்கு ...

ஞான நல்லறம்வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.. .

இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்து இங்கே
திலக வாணுதலார் தங்கள் பாரத தேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம்

(புதுமைப் பெண், செய்யுள் : 4,7,8)

இந்த வைர வரிகள் பாரதி பாடக் காரணம் இல்லாமலும் இருக்குமோ. ஆனால் நம் சிந்தனைக்கு தோன்றுவது கொடூரமாய் கட்டுண்டு இருப்பது எவ்வளவு மோசமோ அதை விட மோசம் கட்டவிழ்த்து தெறிகெட்டு ஓடுவது.

இந்த தேசம் பண்பாடு, கல்வி, கலாசாரம், விஞ்ஞானம், வணிகம் போன்று பல விஷயங்களுக்கு உலகிற்கு வழிகாட்டியாக இருந்த நாடு.  இதன் வரலாறுகள் பலவாறாக திரித்து சொல்ல பட்டு உள்ளன.

கவிஞர்கள் கொஞ்சம் கற்பனை வளம் கொண்டு இருப்பர். கொஞ்சம் அதிகமாக கோபப் படுவர் . கொஞ்சம் சராசரி மனிதரை விட அதிக சிந்தனை செய்வர்.

உதாரணத்திற்கு   பாரதி .. தனி ஒரு மனிதருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்....என்றார். ..
.
ஒரு மனிதருக்கு உணவில்லா நிலை எப்போதும் வரக்கூடாது என்ற தெளிவான சிந்தனை. அதற்காக உலகத்தையே  அழித்திட வேண்டும் என்பது கொஞ்சம் அல்ல அதிகமாகவே அநியாயம் தானே.  ஆகையால் கவிஞன்   மூட்.. என்று ஆங்கிலத்தில் சொல்வோமே அந்த எண்ண ஓட்டம்  எப்படி இருந்ததோ அதற்கு தக்க எதிர் வினையாற்றவோ, வினையாற்றவோ செய்வான்.. அதை அப்படியே செயல் படுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது .. ஒரு இடத்தில பாரதி..
ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும் எனக் காலங்காலமாகப் பேசப்பட்டு வந்த அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் மரபு வழியான குணங்களை அடியோடு மாற்றி, 'நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்' என்று பாடியுள்ளார்.. அதற்காக அவரே சொல்லி விட்டார் என்ற இவை விடுத்து பெண்கள் அலைந்தால் மனித வாழ்க்கைக்கும் நாய்கள் வாழ்க்கைக்கும் அர்த்தம் இன்றி போய் விடும்.

இந்த நாடு முழுக்க முழுக்க ஓர் ஹிந்து நாடு.  படையெடுப்பாளர்களால் இது பல மதத்தினரும் வாழும் நாடாக மாறியது. இதை அரசியல்வாதிகள் மதசார்பற்ற நாடு என்று மாற்றி விட்டனர். போகட்டும், ஆனால் ஹிந்து மதத்தில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை , சமையலறை கைதிகள் என்றெல்லாம் கதை கட்டி விட்டனர். சத்யபாமாவில் ஆரம்பித்து, ஜான்சிராணி, வேலு நாச்சியார் வரை பெண்கள் வீரத்துடன் பரிணமித்தது  இந்து மதம் சார்ந்த இந்த தேசத்தில் தான். மனிதனின் தேவை திட்டமிட்ட வாழ்க்கையின் வரம்பிற்குள்ளே இருந்தவரை , முதியவர், பெண்கள் பொருளீட்ட வெளியே செல்ல வேண்டியது இல்லை என்ற நிலைமை காரணமாக பெண்கள் பெரிதாக தங்களை வருமானம் சார்ந்த தொழில்களில் ஈடு படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் இசை போன்ற பல விஷயங்களில் பெண்கள் தங்களை திறமை வாய்ந்தவர்களாகவே நிர்வகித்து கொண்டனர். ஆண் இல்லா வீடு.... பெண் முதலில் பொருளீட்ட வெளியே புறப்பட்டாள். பொறாமை பிடித்த ஆண் வர்க்க வெறி கொண்டோர்.. இவர்களில் திறம்படைத்தோரை  பெண் பால் சார்ந்து கிண்டல் அடித்தும் கதைகள் கட்டியும் அவர்களின் வளர்ச்சியில் தடை போட துணிந்தனர் அவர்களுக்காக தான் பாரதி புதுமை பெண் எனும் பாத்திரத்தை மனதில் கொண்டு கவிதைகளும் இயற்றினான்.
.
இந்த ஒரு வார்த்தையை வைத்து கொண்டு சதை வைத்து பணம் பார்க்க திட்டமிட்ட யோசனைகள் தான் எத்தனை எத்தனை.  சினிமா வில் நடிக்க பெண்கள் வருவதே அசிங்கம் என்ற நிலைமை எல்லாம் தாண்டி , சினிமாவில் நடிக்க பெண்ணின் அடிப்படை குணமான  அச்சம் மடம் நாணம் இவற்றை விற்றாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று பெண்களின் மனதில் ஆசையை தூண்டும் அளவிற்கு பாரதியை உபயோக படுத்தி கொண்டனர் படுபாவிகள்.

வெற்றி பெற்றனரா இந்த விட்டில் பூச்சிகள்.

ஷோபா, சிலுக்கு என்று இன்று சின்ன திரை சித்ரா  வரை எத்தனை தற்கொலை மரணங்கள்.

எத்தனை விவாகரத்துகள். எத்தனை ஒவ்வாத பல மணங்கள்.. ஆணுக்கு பல தாரம் இருந்ததை மட்டுமே கேள்வி பட்ட இந்த சமூகம் பெண்ணுக்கு பல ஆடவன் என்பதை சர்வ சாதாரணமாக்கி விட்டது.   
.
காமராஜர் வந்தால் இன்று கூட்டம் கூடாது. காமக்கன்னிகைகளான திரை நட்சத்திரம் ஒரு கடை திறப்பிற்கு வந்தாலும் அவ்வளவு கூட்டம். வீட்டில் ஒரு பிசாசு இருக்கிறது அதன் பெயர் தொலைகாட்சி பெட்டி .. அப்பப்பா  எத்தனை பெண்கள் எத்தனை பெண்கள் அது விளம்பரம் ஆகட்டும் அல்லது , நிகழ்ச்சி தொகுப்பாகட்டும்...அத்தனை பேருக்கும் தன் யவ்வன வாளிப்பே மூலதனம்.   

இப்போதெல்லாம் ‘ரியாலிட்டி ஷோ’ என்ற பெயரில் அடிக்கும் கூத்து கேட்கவே வேண்டாம். திருமணம் ஆகாத பெண்களை விட திருமணம் ஆனவர்கள் பத்திரம் எழுதி வைத்து விட்டு கணவனுக்கு துரோகம் இழைத்து, அதையும் காமிரா கண்களில் படமாக்கி மக்கள் இடையே பரப்பி நீங்களும் நாசமா போங்க என்ற கலாச்சார சீரழிவு ... எங்கு போய் முடியுமோ என்ற பயம் ஒரு நிகழ்வை சுட்டி காட்டி நம் வருங்காலத்தை நோக்கிய நம் பயத்தை அதிகமாக்கி உள்ளது.   

 

ஆம் ஒரு நடிகக் குடும்பம் , அதில் ஒரு பெண் நடிகை நான்காவதாக திருமணம் செய்தவரிடம் தோற்று போய் நான் இப்போது மீண்டும் ஒருவரை காதலிக்கிறேன் என்று அறிவிப்பு வேறு  துணிச்சலாக செய்கிறார்.இந்த தொடர் ஓட்டத்திற்கு முடிவு ...யவ்வனமும், சொத்தும்  இருக்கும் வரை கிடையாது .

 

யார் எடுத்து சொல்ல போகிறார்கள் சமூகத்திடம் இது அல்ல பாரதி கண்ட புதுமை பெண் என்பதன் அர்த்தம் என்று.  

                              G.சூர்யநாராயணன். 

This article was published in Dhinasari online paper

Link:

https://dhinasari.com/general-articles/184745-bharathi-and-his-nava-yuvathi-puthumai-penn.html