Wednesday 26 May 2021

அளவு கடந்த - ஜனநாயகம் - Too much of Democracy 

அளவிற்கு மிஞ்சினால் அம்ருதமும் விஷம்.

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் 
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் 
பள்ளி தலம் அனைத்தும் கோவில் செய்குவோம் 
பள்ளி தலம் அனைத்தும் கோவில் செய்குவோம் 
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம். 

என்றான் பாரதி . 
பாரதி 1921 செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இரவு இறைவனடி சேர்ந்தார். நாம் சுதந்திரம் பெற்றதோ 1947 ஆகஸ்ட் மாதத்தில்.. . நாம் சுதந்திரம் பெறுவதற்கு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன் நமக்கு சுதந்திரம் கிட்டி விடும். அப்போது என்ன செய்ய வேண்டும் என்று பாடுகிறான் பாரதி. இவனல்லவோ தீர்க்கதரிசி . 

பாரதத்தின் கடைகோடி எட்டயபுரம் அங்கே பிறந்த ஒருவன் சுதந்திரம் பெறுவோம் தனி தமிழ்நாடு அடைவோம் … வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்றெல்லாம் எழுதவில்லை . மாறாக…. . 

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம். என்கிறான்.. இமயமலையில் நாம் அன்னியர் ஊடுருவ வாய்ப்பில்லாமல் ரோந்து பணியில் இருப்போம் என்கிறான். பல காரணங்களால் அந்நியனுக்கு மிக வாய்ப்பாக இருக்கும் மேலை கடல் .பகுதியில் ரோந்து கப்பல் விடுவோம் .. வர்த்தகமும் மேற்கொள்வோம் என்கிறான் .. எவை கோவில் ஆக வேண்டும், ஆலைகள் வேண்டும் , காகிதம் என்று நம் தேச காகித பணம் செய்வோம் என்கிறான் .. நமக்கென்று வர்த்தகம் இருக்கும் , கல்வி சாலைகள் நம் வரலாற்றோடு இருக்கும் என்றெல்லாம் முன்னமே கணிக்கிறான். பாரதி கண்ட கனவு பலித்ததை பார்த்ததினால் தானோ என்னவோ அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்ற 21ஆம் நூற்றாண்டின் வலிமை மிக்க சொற்றொடரை நமக்கு விட்டு சென்றார். 

பாரதியின் கனவு நினைவானது. சுதந்திரம் கிடைத்தது. என்ன செய்தோம் நாம் .. என்பதை விட என்ன செய்து இருக்க வேண்டும் நாம் என்று எண்ணுகிறேன்.. . 

இந்தியா என்ற பெயர் மாற்றப்பட்டு இருக்க வேண்டும் .. பாரதம் தேசம் என்றே அடையாள படுத்தி இருக்க வேண்டும். . இருந்த வரலாறுகள் குப்பையில் தூக்கி விட்டு எறியப்பட்டு இருக்க வேண்டும். படையெடுப்பாளர்கள் சூட்டிய பெயர்கள் அழிக்கப்பட்டு இருக்க வேண்டும். 

தேசியமும் தெய்வீகமும் நம் இரு கண்கள் என்று சொன்ன முத்துராமலிங்க தேவர் பெருமகனார் கருத்து அன்று இருந்த அனைத்து தேசத் தலைவர்கள் எண்ணத்திலும் உதித்து இருக்க வேண்டும் தேசம் தேசப்பற்று , இறையாண்மை இது சார்ந்தே சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்க வேண்டும். இறையாண்மைக்கு எதிரானோருக்கு மரண தண்டனை என்று சட்டம் கடுமையாக உள்ளதாக, இயற்றப்பட்டு இருக்க வேண்டும். 

பிரிவினை வாதம் எதுவும் தலைதூக்கினால் ராணுவ நடவடிக்கை பாயும் என்றிருக்க வேண்டும். இது இறை தேசம் இங்கு நாத்திகத்திற்கு இடமில்லை. மதமாற்றம் கொலை குற்றமாகும். என்றெல்லாம் இருந்து இருக்க வேண்டும். 

பாடப்படிப்புகளில் ஆங்கிலத்தை விட தாய் மொழிக்கு முக்கியத்துவமும் , பாடத்திட்டங்களில் ஒழுக்கம் தேசப்பற்று ஆகியவை முக்கிய அங்கங்களாகவும். அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னோடி நாம் தான், அது சார்ந்து நாம் பயணித்தல்.. இப்படி கல்வி உருவாக்கப் பட்டு இருக்க வேண்டும். 

அரசின் சலுகைகளை அனுபவிக்க குடும்பத்தில் ஒருவராவது ராணுவம் சார்ந்த ஏதாவது ஒரு பணியில் இருந்து இருக்க வேண்டும். கல்வி, மருத்துவம், சட்டம் அரசின் கையில் மட்டுமே இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் 4வது தூண் ஊடகம் அன்னியர் கட்டுபாட்டிற்கு செல்லாத சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்க வேண்டும். 

அளவுக் கடந்த ஜனநாயக பார்வை கொண்டு நம் தேசத்தின் தொடக்கம் இருந்ததால் இது போன்ற அம்சங்கள் இல்லாததால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிறான். ஜாதி வெறியர்கள் கட்சி ஆரம்பித்து அரசியல்வாதி ஆகிறார்கள்.. சில நேரம் அவர்களின் உளறல்கள் அம்பலம் ஏற ஆரம்பிக்கின்றன. நாட்டில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கலவரங்கள் அந்நியர்கள் தூண்டுதலால் நடைபெறுகின்றது. 

நம் நாட்டின் லா மேக்கர், சட்ட உருவாக்க சபை உறுப்பினர் மிக தைரியத்துடன் நம் எதிரி நாட்டில் போய் நம் நாட்டை பற்றி இழிவாக பேசுகிறார்கள். நாட்டின் முக்கிய தலைவர்கள் தேசத்தை விட்டு வெளியே போய் நாட்டில் உள்ள யாருக்கும் தெரியாத உடன்படிக்கைகள் அயல் நாட்டினருடன் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். கொள்ளையர்கள், கிராதகர்கள், கொலைகாரர்கள் ஆட்சியில் கோலோச்சுகிறார்கள் . காசுக்கு செய்தியை விற்கும் ஊடகங்களை காண முடிகிறது . 

இதன் தாக்கம் எவ்வளவு மோசம் என்றால்.. இந்தப் பெருந்தொற்று காலத்தில் ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் ஒரு மருந்தினை மக்களுக்கு அற்பணிக்கிறது. ஆனால் அரசியல்வாதி என்ற பெயரில் ஒரு மூத்த அரசியல்வாதி அரசியல் காழ்ப்புணர்ச்சியால் .. ராணுவத்திற்கு இதுவா வேலை .. என்று கிண்டல் அடிக்கிறார். சட்டங்கள் சரியாக இருந்தால் அவருக்கு இந்த துணிவு வந்து இருக்குமா ? 

வாழ்க்கையில் ஒழுக்கத்தால் கேட்டு போனவர்கள் , பல தீயப் பழக்கத்தின் உரிமையாளர்கள் எல்லாம் ஜனநாயகத்தின் உயர் பதவிக்கு போட்டி போடுகிறார்கள் . தவறு செய்த பலர் பிணை என்ற ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அரசாங்க பாதுகாப்போடு நாட்டின் முக்கிய பதவியில் இருக்க முடிகிறது. நாட்டின் பிரதமரையே கொல்ல கூட பிரஜைகள் துணிய முடிகிறது.. இந்த கொலைகார கும்பல்களுக்குக் கூட அனுதாபிகள் இருப்பதை பார்க்க முடிகிறது. தேர்தல்களில் மத அரங்குகள், மத நிர்வாகங்கள் பகிரங்கமாகவே கோலோச்சுகிறது.. ஆனால் நம் ஜனநாயக சட்டங்கள் இதை தடுக்க வல்லமை அற்றவையாக இருப்பது கேலிக் கூத்தாகும். 

கோயில்களை அழிப்பேன். என்பவர்கள் கோயில் நகரங்களின் நாடாளுமன்ற , சட்டசபை பிரதிநிதி ஆக முடிகிறது. இந்த பெண்ணை நான்தான் கற்பழிப்பேன் என்பவர்தான் இந்த பெண்ணை தாரை வார்த்து கொடுப்பவர் என்றால் … இங்கு நீதி எப்படி வாசம் செய்யும். . 

என்ன செய்ய போகிறது ஜன நாயகம். ஜனங்களை கடித்து குதறும் நாய்களின் அகம் ஆக உள்ளது ஜனநாயகம் . இதற்கு சாட்சி சமீபத்திய தேர்தல் முடிவுகளும் கலவரங்களும். கண்ணெதிரே அட்டூழியம் ஆனாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. கிழிந்தது பெண்களின் ஆடைகள், அழிந்தது மக்களின் உரிமை .. கொத்து கொத்தாய் கொலைகள் லட்ச லட்சமாய் உள்நாட்டில் அகதிகள். பாதிக்கப்பட்டோரில் அதிகம் பட்டியல் இன மக்கள். . 

வெட்கக்கேடு … உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நாம் தானாம் … என்ன செய்யப் போகிறோம் 

 தோற்று விட்டோமோ ஜனநாயகத்தில் சர்வேசா !!

1 Comments:

At 29 May 2021 at 05:51 , Blogger balaji said...

nehru மட்டும் இல்லாமல் இருந்து patel பிரதமராக இருந்திருநதால் தானல் சொல்வது நடந்திருக்கும்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home