Thursday, 2 February 2017

இன்று  ரத சப்தமி. .

உத்திராயண புண்ய காலம் ஆரம்பம்.

தட்சிணாயனம்,  உத்திராயணம்.... அது என்ன  அயனம்  என்றால் பாதை. தட்சிண, உத்திர  என்றால்  முறையே  தெற்கு மற்றும் வடக்கு.
அதாவது  சூரியன்  கிழக்கே உதித்தாலும் அதன்  பாதை  தெற்கு  அல்லது வடக்கு  நோக்கி மாறுவது..

என்னுடைய  கல்லூரி காலங்களில்  ஒரு நாள் என் கைவல்ய  தெரு  வீட்டு (கிழக்கு பார்த்த  வீடு ) முகப்பில் எதிர் வீட்டு மரத்தின் நிழலை கவனித்ததில் சிறுது துணுக்குற்றேன் . என்ன  இது நிழல் ன் கோணம் கிட்டத்தட்ட 90 டிகிரி  மாறுகிறதே.  எனக்கு........ என்ன கவலை இருக்கவே இருக்கிறார்  நடமாடும்  களஞ்சியம் ( The walking Encyclopedia)  என் தந்தை  , அவரிடம் கேட்டேன் .  அப்பொழுது இந்த உத்திராயணம் , தட்சிணாயணம் பற்றியும்  உலக உருண்டையின் பாதை மாற்றம்  அது  சம்பந்த பட்ட  relative motion பற்றியும்  தெளிவாக  எடுத்து கூறியதோடு மட்டு மல்லாது, ரத சப்தமி போன்ற சடங்குகள்  செய்வதால்  பல லட்சம் வருடங்களாக இந்த செய்தி என் மூதாதையர் மூலமாக என்னையும்  இதன் மூலமாக நம் சந்ததியனரையும் சென்றடைகிறது. கூடவே என்ன செய்தி  என்றால் நம் முன்னோர்கள் எவ்வளவு  அறிவியல் பூர்வமானவர்கள் என்பதற்கும்  பாரத நாடு , சனாதன தர்மம்  வானவியல் சாஸ்திரத்தில்   உலகில் முன்னோடி  என்பதற்கும் இதுவே சான்று  என்று  கூறினார்  அதின் இன்று  நினைவு கூர்வதில்  பெருமை அடைகிறேன் ......... ஞா.சூ

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home