Wednesday, 10 March 2021

 

சின்னாபின்னமாவது நம் நாடு மட்டுமல்ல நம் சந்ததியும் தான்.


தமிழகமும்  புதுவையும். தமிழ் வளர்ப்பு என்ற போர்வையில் நாத்திக பூமியாகி வெகு நாட்கள் ஆகி விட்டன. நாத்திகம் என்ற இந்த நச்சு பாம்பிற்கு இலக்கு என்ன ?
தமிழ் இலக்கியவாதிகள் அனைவரையும் ஏமாற்றி முதலில் நாத்திக வாதியாக்க வேண்டும்.
இதற்கு இவர்கள் கையில் எடுத்து கொண்ட இரு விஷயம். 

1 சமஸ்கிருதம்,

2 பிராமிணர்கள் .


பிள்ளையார் கோயிலில் ஒரு ஆண்டி இருந்தான். பார்க்க வாட்ட சாட்டமாக இருந்தாலும் ஆண்டியாக இருப்பதால் சாத்வீகி.

நான் கோவக்காரன் தெரிஞ்சுகோங்க என்றும்  நானும் ரவுடிதான் என்பவர்களின் முதல் இலக்கு இந்த ஆண்டி. . அந்த ஆண்டியை அடிக்கற அடியில் மற்றவர்கள் ஒதுங்கனும்... இந்த போலிகள் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற கணக்கில் சமஸ்கிருதத்தின் மீதும் பிராமிணர்கள் மீதும் பல அபாண்ட பழிகளை சுமத்தினார்கள். கடவுளை வணங்கும் தமிழ் பற்றாளன் கூட சமஸ்கிருதத்தின் மீதும், பிராமிணர்கள் மீதும் வெறுப்புடனே இருக்க வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் சில கும்பல் செய்ய பக்திமான்கள் கூட நாத்திக கூடாரத்தின் செயல்பாட்டாளர்களாக இருந்தார்கள். சிலர் வேண்டுமென்றே பக்தி வேஷம் போட்ட நாத்திகர்களாக இருந்தார்கள்.
.
ஆட்டை கடித்து மாட்டை கடித்து இவர்கள் மெதுவாக திருக்குறள், கூட ஆன்மிக புத்தகம் இல்லை என்று சொல்லும் நிலையையும் தாண்டி கந்த சஷ்டி கவசத்தை கூட கிண்டல் செய்யும் அளவிற்கு சென்று விட்டனர். நௌஷத் என்ற இஸ்லாமிய இளைஞனை ப்ராமின பாடங்கள் படிக்க வைத்து பிராமிணன் போல் நடிக்க வைத்து தேவநாதன் என்ற பெயரில் செக்ஸ் லீலைகள் செய்து .. பிராமினர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வரை இவர்கள் தங்கள் காய்களை நகர்த்துகிறார்கள்.
.
எங்கள் ஊரில் ஒரு மூத்த வழக்கறிஞர் மிக பழுத்த நாத்திக பழம் .. இன்று மிகப்பெரும் கடவுள் பக்தர். அவர் சொல்லி தான் பல விஷயங்கள் தெரிய வந்தது. நாத்திகம் என்ற போலி வாதத்தை நம்ப வைக்க இவர்கள் எதை எதையோ பேசுவார்கள், எதுவும் செய்ய தயங்க மாட்டார்கள் இந்த கயவர்கள் என்றும்,  பல ஆண்டுகளை நாத்திகனாக கழித்ததற்கு வருந்துகிறேன் என்றும் ஒரு மேடையில் அவர் கூறினார்.  மேலும்  உலகில் 133 தலைப்புகளை எடுத்து அது பற்றிய ஒருவரின் கருத்துக்கள் உலகிலேயே உயரிய கருத்தாகவும், அதுவும் 2 வரிகளில் ஒரு மனிதன் கூற இயலும் என்றால் அவனுக்கு தெய்வ கடாச்சம் இருந்தால் மட்டுமே முடியும் ஆகையால் திருவள்ளுவர் தெய்வப் புலவர். இந்த கருத்திலேயே நாத்திகம் அடிபட்டு போனதால் நான் நாத்திகத்தை விட்டொழித்து வாழ்ந்து வருகிறேன். இன்று நிம்மதியாக இருக்கிறேன் என்றார்.

திருவள்ளுவரின் தெய்வீக  தோற்றத்தை மாற்றுதல், வள்ளலாரின் தெய்வீக தோற்றத்தை மாற்றுதல்.. தேவாரம், திருவாசகம், திருமுருகாற்று படை , நாலாயிரம் பாடல்கள் அடங்கிய பிரபந்தம், மூவாயிரம் பாடல்கள் அடங்கிய திருமூலரின் திருமந்திரம் .. திருமுறைகளின் மற்ற நூல்கள் இவை எல்லாம் வளர்க்காத தமிழை பராசக்தியின் வசனமும், வேலைக்காரி போன்ற நூல்களும் .. நிர்வாண கிளப் உறுப்பினர் பற்றிய புத்தகங்களும் கொடுக்கும் ..என்று சொல்லும் தமிழ் இயக்கங்கள் தான் இன்று அதிகம் .  இதற்கு ஊன்று கோள்கள் நக்கீரன் போன்ற துர்நாற்றம் நிறைந்த பத்திரிகைகளும் .. சீன சித்தாந்த கம்யூனிஸ்ட்களும், மிஷனரிகளின் சில்லறைகளை வைத்து சித்து விளையாடும் சில லெட்டர் பேட் இயக்கங்களும்.

இவர்களை இயக்கும் ஆதார இயக்கம் திமுக என்ற மிகப்பெரிய அரசியல் கட்சி. என்ன கொடுமை என்றால் இவர்களின் தொண்டர்கள் அதிகம் பேர் மிக நல்ல ஆன்மிக வாதிகள் .    
ஆ.ராசா...வன்னியர்களின் எதிரி ..ஆர்.எஸ்.பாரதி... பட்டியல் இனத்தவர்களின் எதிரி... தேவேந்திரகுல வெள்ளாளர்களை அறவே பிடிக்காத தலைமை.. ஜாதிய சிறுபான்மை என்பதால் ரெட்டியார், யாதவர் இவர்களை ஒதுக்கும் தலைவர்கள். கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி... இவர்கள் அனைவரும். ஹிந்து மத விரோதிகள். கருணாநிதி இந்துக்களை திருடர் என்றார்.  நெற்றியில் இருக்கும் குங்குமத்தை இரத்தமா என்றார். தீ மிதித்த அமைச்சரை கண்டித்தார் ...ஸ்டாலின் இஸ்லாமிய மேடையில் ஹிந்து திருமணத்தை விமர்சித்தார் ... அதே திருமணத்தில் அரபியில் ஓதிய பாத்தியா அவருக்கு புரிந்ததா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை.. கனிமொழி.. தூத்துக்குடி பேராயர்களிடம் நல்ல பெயர்  வாங்க  திருப்பதி பெருமாளை இகழ்ந்து தன் தொகுதியை தக்க வைத்து கொண்டார். தேர்தலுக்கு மட்டும் அவர் நாடார். உதயநிதி பிள்ளையார் விக்ரகத்தை இகழ்ந்தார். இவர்கள் கட்சி ...ஹிந்துக்களின் சித்திரை மாத  புத்தாண்டை பத்தாவது மாதமான தை-யில்  தொடங்குவதாக ஒரு புருடா விட்டது. ஆட்சியில் இருந்தபோது அதற்கென ஓர் சட்டமும் இயற்றி ஹிந்துக்களை இம்சித்தது.  அதுபோல் கிருஸ்துவ புத்தாண்டு அக்டோபரில் தான் என்றோ  ... முஸ்லிம்களின் புத்தாண்டு ஷவ்வல் மாதத்தில் தான் என்று சொல்ல திராணி உண்டா ?  
.
சரி தமிழுக்கு இவர்கள் செய்த நன்மை என்ன ... அகத்தியரின் கண்டு பிடிப்புகள் அச்சில் ஏற உதவி இருக்கிறார்களா? ராஜராஜ சோழன், உவே.சா , ராஜேந்திர சோழன், பாண்டிய மன்னர்கள் இவர்கள் புகழை பார் புகழும் அளவில்..  குறைந்த பட்சம் பாரதம் புகழும் அளவிலாவது எடுத்து சென்று இருக்கிறார்களா? .
.
இலங்கையில் தமிழர்கள் இறக்கும் வேளையில் போலி உண்ணாவிரதம் இருந்து அரசியல் வாழ்கையை தக்கவைத்து கொள்ள நாடகமாடியவர்கள் இவர்கள். இவர்களா தமிழின் காவலர்கள்.?  ஆட்சியில் ஊழல், கொள்கையால் ஹிந்து விரோதம்.. கூட்டமாக கொள்ளையடித்தல், குடும்பமே கழகம். கலவரத்தின் ஊற்றுக்கண்.. குட்டி ராஜாக்களின் கட்சி .. தொண்டர்களை புறக்கணிக்கும் கிராதகர்கள் இவர்களுக்கு பின் ஆரம்பித்த கட்சியில் எல்லாம் போஸ்டர் ஒட்டி உழைக்க ஆரம்பித்தவர் எல்லாம் உயர் பதவியில் இவர்களோ , மூன்றாம் கலைஞர், நான்காம் கலைஞர் என்று கட்டியம் கூறி கொண்டு வலம் வருகிறார்கள் . ஆன்மிகத்திற்கு மதிப்பில்லை, தமிழுக்கு தொண்டு இல்லை, தமிழர் நலன் இல்லை, தொண்டனுக்கு வாழ வழியில்லை, ஹிந்து என்று சொன்னாலே வெறுப்பு... இப்படி வெகுஜன விரோதிகளான இவர்களை இன்னுமா பல்லக்கிலேயே பவனி வர அனுமதிக்க போகிறோம். முடியட்டும் முடியாட்சி. முழங்கட்டும் தேசியத்தின் சங்கு. கைகோர்த்து தேசியம் காப்போம். உலகின் குருவாய் பாரத அன்னையை உயற்றுவோம். சிந்தித்து செயல்படும் நேரம் இது. சிந்தனைகளை சிதற விட்டால் சின்னாபின்னமாவது நம் நாடு மட்டுமல்ல நம் சந்ததியும் தான். நினைவிற்கொள்வோம். .. ஜெய் ஹிந்த்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home